/
உள்ளூர் செய்திகள்
/
கன்னியாகுமரி
/
ரூ. 20 ஆயிரம் லஞ்சம்: பேரூராட்சி ஊழியர்கள் இருவர் கைது
/
ரூ. 20 ஆயிரம் லஞ்சம்: பேரூராட்சி ஊழியர்கள் இருவர் கைது
ரூ. 20 ஆயிரம் லஞ்சம்: பேரூராட்சி ஊழியர்கள் இருவர் கைது
ரூ. 20 ஆயிரம் லஞ்சம்: பேரூராட்சி ஊழியர்கள் இருவர் கைது
ADDED : ஏப் 17, 2025 01:35 AM
நாகர்கோவில்:சொத்து வரி பெயர் மாற்றம் செய்வதற்காக 20 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய பேரூராட்சி ஊழியர்கள் இருவரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்
கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே பாகோடு பேரூராட்சிக்கு உட்பட்ட குரிங்கன் விளை பகுதியை சேர்ந்தவர் தேவதாஸ் 54. இவருடைய சகோதரர் வெளிநாட்டில் வேலை செய்கிறார். அவருக்கு சொந்தமான 18 சென்ட் நிலத்திற்கான சொத்துவரி செலுத்த பெயர் மாற்றம் செய்வதற்க்காக வேண்டி பாகோடு பேரூராட்சி அலுவலகத்தில் விண்ணப்பித்துள்ளார். பெயர் மாற்றம் செய்ய வேண்டுமெனில் 50 ஆயிரம் ரூபாய் தர வேண்டும் என்று பதிவு எழுத்தர் ஜஸ்டின் ஜெபராஜ் 38, கேட்டுள்ளார்.
பேரம் பேசி 20 ஆயிரம் ருபாய் என முடிவு செய்யப்பட்டது. நாகர்கோவில் லஞ்ச ஒழிப்பு போலீசில் தேவதாஸ் புகார் செய்தார். அவர்களது ஆலோசனையின் பேரில் ரசாயனம் தடவிய பணத்தை பேரூராட்சி அலுவலகத்தில் ஜஸ்டின் ஜெபராஜிடம் கொடுக்க முயன்றார். அவர் பணத்தை அலுவலகத்தில் எலக்ட்ரீஷியனாக பணிபுரியும் சுஜின் 37, என்பவரிடம் கொடுக்கும்படி கூறியுள்ளார். அவரிடம் பணத்தை கொடுத்தபோது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் இருவரையும் கைது செய்தனர்.