UPDATED : அக் 21, 2026 07:11 PM
ADDED : அக் 21, 2026 07:07 PM
அ நிறம் | அளவு
நாகர்கோவில்:
சம்பள உயர்வு தொடர்பான பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் ரப்பர் தோட்ட தொழிலாளர்கள் மீண்டும் போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.
அரசு ரப்பர் கழகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள ரப்பர் தோட்டங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வு வழங்கப்படவில்லை. சம்பள உயர்வு வழங்க வேண்டிய காலம் முடிந்த பின்னரும் அது பற்றி அரசு எந்த முடிவும் எடுக்காமல் காலம் தாழ்த்தி வருகிறது. இதை கண்டித்து கடந்த சில மாதங்களாக தொழிலாளர்கள் போராட்டம் நடத்தினர். அதன்பின் ரப்பர் கழக அதிகாரிகள், கலெக்டருடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் உடன்பாடு எட்டப்படவில்லை.இந்நிலையில் நேற்று நாகர்கோவில் வடசேரியில் உள்ள ரப்பர் கழக நிர்வாக இயக்குனர் அலுவலகத்தை முற்றுகையிட்டு தொழிலாளர்கள் மீண்டும் போராட்டம் நடத்தினர்.
