/
உள்ளூர் செய்திகள்
/
கன்னியாகுமரி
/
எஸ். எஸ். ஐ., மாயம்: பெண்ணிடம் விசாரணை
/
எஸ். எஸ். ஐ., மாயம்: பெண்ணிடம் விசாரணை
ADDED : செப் 11, 2025 03:37 AM
நாகர்கோவில்:அருமனை போலீஸ் எஸ். எஸ். ஐ. மாயமாகி பத்து நாட்களாகியும் தகவல் இல்லாததால் போலீசார் குழப்பம் அடைந்துள்ளனர். இது தொடர்பாக பெண்ணிடம்விசாரித்தனர்.
கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை அருகே செங்கண்முலாவை சேர்ந்தவர் லட்சுமணன் 47. அருமனை போலீஸ் ஸ்டேஷன் எஸ் . எஸ். ஐ . யாக உள்ளார். மனைவி சிமி 45. ஒரு மகள் உள்ளார். கடந்த 30- ம் தேதி லட்சுமணன் சங்கரன் கோவிலில் பாதுகாப்பு பணிக்காக சென்று விட்டு ஒன்றாம் தேதிவீடு திரும்புவதாக கூறி சென்றார். ஆனால் வீட்டுக்கு வரவில்லை. அலைபேசி 'ஸ்விட்ச் ஆப்' செய்யப்பட்டிருந்தது. முன்னதாக ஸ்டேஷன் அருகில் உள்ள போலீஸ் குடியிருப்பில் லட்சுமணன் தங்கி இருந்தார். அங்கு சோதனை செய்தபோதுஅவரது அலைபேசி, பைக் இருந்தது. அவரது அலைபேசி எண்ணை ஆய்வு செய்தபோது குறிப்பிட்ட ஒரு எண்ணில் அதிக முறை லட்சுமணன் பேசி இருந்ததும் வாட்ஸ் ஆப்பில் சார்ட்டிங் செய்ததும் தெரிய வந்தது. அந்த எண்ணில் போலீசார் தொடர்பு கொண்டபோது ஒரு பெண் பேசினார். அவரிடமும் விசாரணை நடந்தது. ஆனால் லட்சுமணன் பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை என்று போலீஸ் அதிகாரிகள் கூறினர்.
லட்சுமணன் குடும்பத்தில் சிறிய பிரச்னை இருந்ததால் அவர் மனம் உடைந்து மாயமாகி இருக்கலாம் என்றும் போலீசார் கருதுகிறார்கள். வெளியூரில் உள்ள லட்சுமணனின் நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் தகவல் அனுப்பி அவர்களிடமும் விசாரிக்கின்றனர்.