/
உள்ளூர் செய்திகள்
/
கன்னியாகுமரி
/
விபத்தில் எஸ்.எஸ்.ஐ., பலி ரூ.25 லட்சம் நிவாரணம்
/
விபத்தில் எஸ்.எஸ்.ஐ., பலி ரூ.25 லட்சம் நிவாரணம்
ADDED : பிப் 16, 2024 02:01 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சாலை விபத்தில் இறந்த, சிறப்பு சப் - இன்ஸ்பெக்டரின் குடும்பத்துக்கு, 25 லட்சம் ரூபாய், நிவாரண நிதி வழங்க, முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டம், தக்கலை போக்குவரத்துப் பிரிவில், சிறப்பு சப் - இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்தவர் ஜஸ்டின், 53. இவர் நேற்று மதியம் பணி நிமித்தமாக, இருசக்கர வாகனத்தில், நாகர்கோவில் - திருவனந்தபுரம் தேசிய நெடுஞ்சாலையில், அக்கினியானா குளம் அருகே சென்றபோது, லாரி மோதி பரிதாபமாக இறந்தார்.
இதை அறிந்த முதல்வர், அவரது குடும்பத்துக்கு, ஆழ்ந்த இரங்கலை தெரிவித்ததுடன், 25 லட்சம் ரூபாய் நிவாரண நிதி வழங்க உத்தரவிட்டுள்ளார்.
- நமது நிருபர் -