/
உள்ளூர் செய்திகள்
/
கன்னியாகுமரி
/
நிலத்தை விற்க முயற்சி ஹிந்து அமைப்பு எதிர்ப்பு
/
நிலத்தை விற்க முயற்சி ஹிந்து அமைப்பு எதிர்ப்பு
ADDED : செப் 21, 2024 10:22 PM
நாகர்கோவில்:திருவிதாங்கூர் மன்னர் காலத்தில், குற்றவாளிகளை துாக்கில் போடும் தொழிலாளர்களுக்கு, பார்வதிபுரத்தில் நிலம் ஒதுக்கப்பட்டது. இது, 'ஆராச்சர்' நிலம் என அழைக்கப்படுகிறது. அரசு வசம் இருந்த இந்த நிலத்தை, சில தனியார் ஆக்கிரமித்திருந்தனர்.
கடந்த 2013ல், நாகராஜன் கலெக்டராக இருந்தபோது, இந்த நில ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. அதை எதிர்த்து ஆக்கிரமிப்பாளர்கள் தொடர்ந்த வழக்கை, அரசு முறைப்படி நடத்தாததால், மீண்டும் அவர்களுக்கு சாதகமாக உத்தரவு வெளியானது.
இந்நிலையில், இந்நிலத்தை, பிளாட் போட்டு விற்கும் நடவடிக்கைகள் தொடர்கின்றன. அதை தடுத்து நிறுத்த கோரியும், ஆராச்சர் நிலத்தை அரசு கையகப்படுத்த வலியுறுத்தியும், ஹிந்து தமிழர் கட்சி மாநில செயலர் ஈசானிய சிவன், 40, என்பவர், நேற்று காலை, நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்றார். போலீசார் அவரை தடுத்து, அழைத்துச் சென்றனர்.