/
உள்ளூர் செய்திகள்
/
கன்னியாகுமரி
/
ஏற்கனவே 2 திருமணம் சிறுமியை மணந்தவர் கைது
/
ஏற்கனவே 2 திருமணம் சிறுமியை மணந்தவர் கைது
ADDED : அக் 09, 2024 01:48 AM
நாகர்கோவில்,:கன்னியாகுமரி மாவட்டம் குளத்துாரைச் சேர்ந்த 14 வயது சிறுமிக்கும், பறக்கை தெற்கு கன்னங்குளத்தைச் சேர்ந்த நீலகண்டன், 36, என்பவருக்கும் திருமணம் நடக்க உள்ளதாக, ராஜகமங்கலம் சமூக நலத்துறை அலுவலருக்கு மொபைல் போனில், ஒருவர் தகவல் தெரிவித்தார்.
நீலகண்டன் வீட்டிற்கு சமூகநலத்துறை அதிகாரிகள் சென்றபோது, 14 வயது சிறுமியுடன் திருமணம் முடிந்து மணக்கோலத்தில் அவர் நின்றிருந்தார்.
கன்னியாகுமரி மகளிர் இன்ஸ்பெக்டர் சாந்தகுமாரி, நீலகண்டனை, 'போக்சோ' சட்டத்தில் கைது செய்தார். அவர், சிறுமியை மூன்றாவதாக திருமணம் செய்தது போலீஸ் விசாரணையில் தெரிந்தது.
அவர் பிடியில் சிக்கியிருந்த சிறுமி மீட்கப்பட்டார். இவரின் இரு மனைவியர் உயிருடன் இருக்கும்போது, மூன்றாவதாக சிறுமியை திருமணம் செய்தது போலீஸ் விசாரணையில் தெரிந்தது. அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரிக்கின்றனர்.