/
உள்ளூர் செய்திகள்
/
கன்னியாகுமரி
/
ஆற்றில் மூழ்கியதாக கருதப்பட்டவர் காலையில் வீடு திரும்பினார்
/
ஆற்றில் மூழ்கியதாக கருதப்பட்டவர் காலையில் வீடு திரும்பினார்
ஆற்றில் மூழ்கியதாக கருதப்பட்டவர் காலையில் வீடு திரும்பினார்
ஆற்றில் மூழ்கியதாக கருதப்பட்டவர் காலையில் வீடு திரும்பினார்
ADDED : செப் 19, 2024 02:13 AM
நாகர்கோவில்:ஆற்றில் மூழ்கி இறந்ததாக இரவு முழுவதும் தேடப்பட்ட இளைஞர் அடுத்த நாள் காலை வீட்டுக்கு வந்து இன்ப அதிர்ச்சியை ஏற்படுத்தினார்.
கன்னியாகுமரி மாவட்டம் களியல் அருகே அஞ்சு கண்டறையை சேர்ந்தவர் செபின் 21. இவரும் நண்பர்களும் வண்ணான் பாறை என்ற இடத்தில் அமர்ந்து மது அருந்திவிட்டு அப்பகுதியில் ஓடும் கோதையாற்றில் குளிக்க சென்றனர். குளித்துக் கொண்டிருந்த போது செபினை திடீரென்று காணவில்லை.
தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தீயணைப்பு துறையினரும், களியல் போலீசாரும் இரவு 12 மணி வரை தேடியும் செபினை கண்டுபிடிக்க முடியவில்லை. வெளிச்சமின்மை காரணமாக தேடுதல் நிறுத்தப்பட்டது.
இந்நிலையில் நேற்று காலை செபின் தனது வீட்டுக்கு வந்துள்ளார். இது பற்றி போலீசுக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் நடத்திய விசாரணையில் போதையில் அருகில் இருந்த வாழைத்தோட்டத்தில் படுத்து உறங்கியது தெரியவந்தது. அவரை போலீசார் எச்சரித்து அனுப்பி வைத்தனர்.