/
உள்ளூர் செய்திகள்
/
கன்னியாகுமரி
/
பயிற்சி பெண் டாக்டர் விஷம் குடிப்பு
/
பயிற்சி பெண் டாக்டர் விஷம் குடிப்பு
ADDED : டிச 11, 2024 02:41 AM
நாகர்கோவில்:நாகர்கோவில் ஆசாரிபள்ளம் மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை பயிற்சி பெண் டாக்டர் விஷம் குடித்தது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கள்ளக்குறிச்சியைச் சேர்ந்தவர் சாருமதி, 22. நாகர்கோவில் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் எம்.பி.பி.எஸ். நான்காம் ஆண்டு முடித்து, பயிற்சி டாக்டராக பணிபுரிந்து வருகிறார்.
நேற்று விடுதியில் இருந்த இவர் திடீரென்று மயங்கி விழுந்தார். பரிசோதித்தபோது அவர் விஷம் குடித்து இருந்தது தெரிய வந்தது.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விஷம் குடித்ததற்கான காரணம் உடனடியாக தெரிய வரவில்லை. அவருடன் தங்கி இருந்த சக மாணவிகளிடம் விசாரித்த போது கடந்த சில நாட்களாக அவர் மன அழுத்தத்தில் இருந்ததாக கூறியுள்ளனர்.
நாகர்கோவில் டி.எஸ்.பி. லலித்குமார் விசாரிக்கிறார்.