/
உள்ளூர் செய்திகள்
/
கன்னியாகுமரி
/
சிக்னல் பாக்ஸ் எரிந்து நாசம் குமரியில் ரயில்கள் தாமதம்
/
சிக்னல் பாக்ஸ் எரிந்து நாசம் குமரியில் ரயில்கள் தாமதம்
சிக்னல் பாக்ஸ் எரிந்து நாசம் குமரியில் ரயில்கள் தாமதம்
சிக்னல் பாக்ஸ் எரிந்து நாசம் குமரியில் ரயில்கள் தாமதம்
ADDED : பிப் 08, 2025 01:16 AM
நாகர்கோவில்:ஆரல்வாய்மொழி ரயில் நிலையம் அருகே ஏற்பட்ட தீ விபத்தில் சிக்னல் பாக்ஸ் எரிந்து நாசமானதால், ரயில்கள் நாகர்கோவிலுக்கு நேற்று தாமதமாக வந்தன.
குமரி மாவட்டம், ஆரல்வாய்மொழி ரயில் நிலையம் அருகே உள்ள சிக்னல் பாக்ஸ் வாயிலாக, நாகர்கோவில் சந்திப்பு மற்றும் டவுன் ரயில் நிலையங்களுக்கு வரும் ரயில்களுக்கான சிக்னல்கள் வழங்கப்படும்.
இந்த நிலையத்தின் வடக்கு பகுதியில், முட்புதர் நேற்று முன்தினம் மாலை திடீரென தீப்பிடித்தது. காற்று வேகமாக வீசியதால், தீ பரவி தண்டவாளம் அருகே இருந்த ஹோம் சிக்னல் பாக்ஸ், லொக்கேஷன் சிக்னல் பாக்ஸ் ஆகியவற்றுக்கு தீ பரவியது. தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர்.
சிக்னல் பாக்ஸ்கள் முற்றிலும் எரிந்து நாசமாகின. இதனால் திருநெல்வேலி - நாகர்கோவில் இடைய இரு மார்க்கத்திலும் ரயில்களுக்கு சிக்னல் கொடுப்பதில் சிக்கல் ஏற்பட்டது. இதனால் கன்னியாகுமரி, அனந்தபுரி, கோவை, பெங்களூரு எக்ஸ்பிரஸ் ரயில்கள், பயணியர் ரயில்கள் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக தாமதமாக வந்தன.