/
உள்ளூர் செய்திகள்
/
கன்னியாகுமரி
/
வெளிநாட்டில் இருந்தபடி திருட்டு முயற்சி தடுப்பு: இருவர் கைது
/
வெளிநாட்டில் இருந்தபடி திருட்டு முயற்சி தடுப்பு: இருவர் கைது
வெளிநாட்டில் இருந்தபடி திருட்டு முயற்சி தடுப்பு: இருவர் கைது
வெளிநாட்டில் இருந்தபடி திருட்டு முயற்சி தடுப்பு: இருவர் கைது
ADDED : ஜன 03, 2025 11:39 PM

நாகர்கோவில்:நாகர்கோவில் அருகே பூட்டிய வீட்டில் திருட முயன்றதை வெளிநாட்டில் இருந்தவாறு சி.சி.டிவி மூலம் கண்டு விரட்டப்பட்ட மூவரில் இருவர் கைது செய்யப்பட்டனர்.
நாகர்கோவில் அருகே ரஹமத் கார்டனைச் சேர்ந்தவர் சலீம் 58. மஸ்கட்டில் இன்ஜினியராக பணிபுரியும் மகன் வீட்டுக்கு சலீம் குடும்பத்தினருடன் சென்றார். பூட்டப்பட்டிருந்த வீட்டில் சி.சி.டிவி கேமராக்கள் இயங்கி கொண்டிருந்தன. வெளிநாட்டில் இருந்தவாறு அடிக்கடி கேமரா காட்சிகளை சலீம் கவனித்து கொண்டிருந்தார்.
டிச.31 நள்ளிரவு வீட்டுக்குள் இருவர் நடமாடுவதை கண்டு அக்கம் பக்கத்தில் உள்ளவர்களிடம் தெரிவித்தார். அவர்கள் வீட்டின் வெளியே வந்து திருடன் திருடன் என கத்தினர். இதையடுத்து வீட்டிற்குள் இருந்த இருவர் பின்பக்க மதில் சுவரில் குதித்து தப்பினர். இதுதொடர்பாக கோட்டார் போலீசார் விசாரித்தனர்.
போலீஸ் விசாரணையில் தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் சேர்மதுரை, திருநெல்வேலி மாவட்டம் பனகுடி முத்து 37, அதே ஊரை சேர்ந்த வெட்டும்பெருமாள் 45, ஆகியோர் இத் திருட்டில் ஈடுபட்டது தெரிந்தது. முத்து, வெட்டும் பெருமாள் கைது செய்யப்பட்டனர். இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். சேர்மதுரையை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இவர் மீது 30க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.