/
உள்ளூர் செய்திகள்
/
கன்னியாகுமரி
/
சிறுத்தைக்கு வைரஸ் பாதிப்பு கால்நடைகளுக்கு தடுப்பூசி
/
சிறுத்தைக்கு வைரஸ் பாதிப்பு கால்நடைகளுக்கு தடுப்பூசி
சிறுத்தைக்கு வைரஸ் பாதிப்பு கால்நடைகளுக்கு தடுப்பூசி
சிறுத்தைக்கு வைரஸ் பாதிப்பு கால்நடைகளுக்கு தடுப்பூசி
ADDED : பிப் 07, 2024 12:24 AM
நாகர்கோவில்:கன்னியாகுமரி மாவட்டம், சிற்றாறு அரசு ரப்பர் கழக குடியிருப்பில் பிடிபட்ட சிறுத்தைக்கு வைரஸ் தொற்று நோய் உறுதி செய்யப்பட்டுள்ளது. அதனால், அப்பகுதியை ஒட்டிய 24 மலையோர கிராமங்களில் கால்நடைகளுக்கு தடுப்பூசி போடும் பணி நாளை துவங்குகிறது.
கடந்த, 31-ம் தேதி அதிகாலை சிற்றாறு அரசு ரப்பர் கழக குடியிருப்பு பகுதியில் உலாவிக் கொண்டிருந்த நான்கு மாத சிறுத்தை குட்டி பிடிபட்டது. சோர்வாக இருந்ததால் இதன் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இதில், சிறுத்தை குட்டிக்கு 'டிஸ்டெம்பர் 'என்ற அரிய வகை வைரஸ் தாக்குதல் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனால் அந்த பகுதியில் உள்ள செல்ல பிராணிகள் மற்றும் கால்நடைகளுக்கு இந்த நோய் பரவ வாய்ப்புள்ளதாக கருதப்படுவதால், அவற்றுக்கு தடுப்பூசி போடும் பணி நாளை துவங்குகிறது.
மலையோர கிராம மக்கள் தங்கள் வீடுகளில் வளர்க்கும் செல்ல பிராணிகளை முகாமுக்கு அழைத்து வந்து தடுப்பூசி போட்டுச் செல்லும்படி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

