/
உள்ளூர் செய்திகள்
/
கன்னியாகுமரி
/
ஜனநாயகத்தின் வலிமைமிக்க ஆயுதம் ஓட்டு: தேர்தல் பிரசாரத்தில் சீமான் பேச்சு

UPDATED : மார் 28, 2024 04:10 PM
ADDED : மார் 28, 2024 11:26 AM

நாகர்கோவில்: ஓட்டு என்பது ஜனநாயகத்தின் வலிமை மிக்க ஆயுதம் என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறினார்.
கன்னியாகுமரியில் தேர்தல் பிரசாரத்தில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியதாவது: தனித்து யாருடனும் கூட்டணி இல்லாமல், உயர்ந்த கொள்கைகளை சுமந்து கொண்டு, தேர்தல் களத்தில் நிற்கிறோம். நாங்கள் தனித்து போட்டியிடுவதற்கு காரணம், ஏற்கனவே உள்ள ஆட்சியாளர்கள் மீது உள்ள வெறுப்பு, எங்கள் மீது பரவக் கூடாது என்பதற்கு தான்.
பா.ஜ., மற்றும் காங்., ஆட்சியில், நாட்டு மக்கள் கொண்டாடும் வகையில் ஏதாவது சட்டங்கள் அல்லது திட்டங்களை கொண்டு வரவில்லை. ஓட்டு என்பது ஜனநாயகத்தின் வலிமை மிக்க ஆயுதம். இளைஞர்கள் நாட்டு நடப்பு சம்பவங்கள் நன்கு அறிந்து ஓட்டளிக்க வேண்டும்.
வார்த்தைகளுக்கு மயங்கி விடாதீர்கள். காங்கிரஸ் மற்றும் பா.ஜ.,வுக்கு இடையே ஒரு வேறுபாடு சொல்லுங்கள். காங்கிரஸ் ஆட்சியில் தான் நீட் தேர்வு கொண்டு வரப்பட்டது. மைக் சின்னத்தில் ஓட்டளிக்க வேண்டும். இவ்வாறு சீமான் பேசினார்.