/
உள்ளூர் செய்திகள்
/
கன்னியாகுமரி
/
தொடர் மழையால் குளிர்ந்த குமரி * திற்பரப்பு அருவியில் கொட்டும் தண்ணீர்
/
தொடர் மழையால் குளிர்ந்த குமரி * திற்பரப்பு அருவியில் கொட்டும் தண்ணீர்
தொடர் மழையால் குளிர்ந்த குமரி * திற்பரப்பு அருவியில் கொட்டும் தண்ணீர்
தொடர் மழையால் குளிர்ந்த குமரி * திற்பரப்பு அருவியில் கொட்டும் தண்ணீர்
ADDED : மே 14, 2024 06:49 PM

நாகர்கோவில்:கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்யும் சாரல் மழையால், குளிர்ந்த காலநிலை நிலவுகிறது. வெப்பத்தின் பிடியில் சிக்கி தவித்த மக்கள், இதனால் நிம்மதி அடைந்துள்ளனர்.
திற்பரப்பு அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. ஐந்து மாதங்களாக வெப்பத்தின் பிடியில் இம்மாவட்ட மக்கள் சிக்கித் தவித்தனர். ஒக்கி புயலும் நான்கு வழிச்சாலை பணியிலும் ஆயிரக்கணக்கான மரங்கள் அழிக்கப்பட்ட நிலையில், மாவட்டத்தின் கால நிலை மாறியுள்ளது. வெயில் அடித்தாலும் வீசும் காற்றில் எப்போதும் ஈரப்பதம் இருக்கும் இந்த மாவட்டத்தில் பாலைவன காற்று வீசும் நிலை ஏற்பட்டது.
இந்நிலையில், சில நாட்களாக பரவலாக மழை பெய்கிறது. குறிப்பாக நீர் பிடிப்பு மலையோர பகுதிகளில் கனமழை பெய்கிறது. நேற்று காலை வரை களியலில் அதிகபட்சமாக 5.03 செ.மீ., மழை பதிவானது. தக்கலையில் 3.74, மயிலாடி 4.76, சிற்றாறு 4.24, திற்பரப்பு 4.22 செ.மீ., மழை பதிவானது.
மொத்தம் 48 அடி உயரம் கொண்ட பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் நேற்று 44.7 அடியாக உள்ளது. பேச்சிப்பாறை அணை உயர்ந்து வருவதால் மறுகால் வழியாக எந்த நேரத்திலும் தண்ணீர் திறந்து விடப்படலாம் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். 72 அடி உயரம் கொண்ட பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 46:7 அடியாக உள்ளது.
தொடர்ந்து சாரல் மழை பெய்து வருவதாலும், மேகமூட்டத்தாலும் மாவட்டத்தில் குளிர்ந்த கால நிலை நிலவுவதால் மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர். திற்பரப்பு அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டுவதால் சுற்றுலா பயணிகள் உற்சாகமடைந்துள்ளனர்.

