/
உள்ளூர் செய்திகள்
/
கன்னியாகுமரி
/
'வந்தே பாரத்' ரயிலுக்கு கோஷமிட்டு வரவேற்பு
/
'வந்தே பாரத்' ரயிலுக்கு கோஷமிட்டு வரவேற்பு
ADDED : ஜன 04, 2024 10:21 PM

நாகர்கோவில்:நாகர்கோவிலுக்கு நேற்று முதன்முறையாக வந்து புறப்பட்ட வந்தே பாரத்' ரயிலை பா.ஜ., மற்றும் காங்., கட்சியினர் போட்டி போட்டு வரவேற்றனர்.
'நாகர்கோவிலுக்கு வந்தே பாரத் ரயில் வாரம் ஒரு முறை இயக்கப்படும்' என்று ரயில்வே அறிவித்த நிலையில் நேற்று அதிகாலை 5:15 மணிக்கு சென்னை எழும்பூரில் இருந்து புறப்பட்டு மதியம் 2:10 மணிக்கு நாகர்கோவில் வந்தடைந்தது.
பின், இந்த ரயில் மதியம் 2:50க்கு சென்னைக்கு புறப்பட்டு சென்றது. பகல் நேரத்தில் இயக்கப்படும் இந்த ரயிலுக்கு பயணியர் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.
பயண நேரம் 9 மணி நேரம் ஆகும். நேற்று முதல் நாளிலேயே அனைத்து டிக்கெட்டுகளும் விற்று தீர்ந்தன.
இந்நிலையில் ரயிலை வரவேற்க பா.ஜ., மற்றும் காங்., கட்சியினர் நாகர்கோவில் ரயில்வே ஸ்டேஷனில் கூடியிருந்தனர். பா.ஜ.,வினர் பிரதமர் மோடியை வாழ்த்தி கோஷமிட்டு வரவேற்றனர்.
காங்கிரசார், விஜய் வசந்த் எம்.பி.,க்கு ஆதரவாக கோஷமிட்டு, லட்டு வழங்கினர்.