/
உள்ளூர் செய்திகள்
/
கன்னியாகுமரி
/
வீடு வீடாக போதை பொருள் சப்ளை பெண் கைது
/
வீடு வீடாக போதை பொருள் சப்ளை பெண் கைது
ADDED : ஏப் 08, 2025 06:42 AM
நாகர்கோவில் : உணவு டெலிவரி போல் கேரளாவில் வீடு வீடாக ஸ்கூட்டரில் சென்று புகையிலை பொருட்களை சப்ளை செய்த பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டம் சங்கனாச்சேரி பகுதியைச் சேர்ந்தவர் சாந்தி 35. இவர் அலைபேசியில் ஆர்டர் எடுத்து புகையிலை உள்ளிட்ட போதை பொருட்களை விநியோகித்து வருவதாக கிடைத்த தகவலை தொடர்ந்து போலீசார் கண்காணித்தனர். அவரது வீட்டில் திடீர் சோதனை நடத்தினர். அப்போது வீட்டு கழிவறையிலிருந்து புகையிலை உள்ளிட்ட போதை பொருட்கள் கைப்பற்றப்பட்டன.
உணவு டெலிவரி வழங்குவது போன்று வீடு வீடாகச் சென்று புகையிலைப் பொருட்கள் விற்றதாகவும், அதற்கு நான்கு மடங்கு அதிக விலை வைத்ததாகவும் சாந்தி போலீசில் ஒப்புக் கொண்டார். அவரை போலீசார் கைது செய்தனர்.