/
உள்ளூர் செய்திகள்
/
கன்னியாகுமரி
/
2 குழந்தைகளுடன் கடலில் குதிக்க முயன்ற பெண் மீட்பு
/
2 குழந்தைகளுடன் கடலில் குதிக்க முயன்ற பெண் மீட்பு
ADDED : அக் 29, 2025 02:21 AM
நாகர்கோவில்: குமரி கடற்கரையில், இரு குழந்தைகளுடன் கடலில் குதிக்க முயன்ற பெண்ணை அங்கிருந்த சுற்றுலா பயணியர் மீட்டனர்.
கன்னியாகுமரி கடற்கரைக்கு நேற்று வந்த பெண் ஒருவர், தன் இரு குழந்தைகளுடன் நீண்ட நேரமாக கடலை பார்த்தபடி அமர்ந்திருந்தார். திடீரென கடலை நோக்கி குழந்தைகளுடன் சென்று குதிக்க முயன்றார்.
அதை கவனித்த சுற்றுலா பயணியர் ஓடிச்சென்று தடுத்து, குழந்தைகளையும், அவரையும் மீட்டனர். பின், கன்னியாகுமரி போலீசாரிடம் அவர்களை ஒப்படைத்தனர்.
விசாரணையில், ஈத்தாமொழியைச் சேர்ந்த பெண் என்பதும், குடும்ப பிரச்னையால் தற்கொலை முடிவுடன் கன்னியாகுமரி வந்ததும் தெரிந்தது.
எஸ்.பி., ஸ்டாலின் உத்தரவின்படி, பெண் போலீசார் அவருக்கு அறிவுரை வழங்கி, குழந்தைகளையும், அவரையும், வீட்டிற்கு அழைத்துச் சென்று ஒப்படைத்தனர்.

