/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
காவிரி, அமராவதி இணையும் திருமுக்கூடலுார் சுற்றுலா தலமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படுமா?
/
காவிரி, அமராவதி இணையும் திருமுக்கூடலுார் சுற்றுலா தலமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படுமா?
காவிரி, அமராவதி இணையும் திருமுக்கூடலுார் சுற்றுலா தலமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படுமா?
காவிரி, அமராவதி இணையும் திருமுக்கூடலுார் சுற்றுலா தலமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படுமா?
ADDED : பிப் 01, 2025 12:55 AM
காவிரி, அமராவதி இணையும் திருமுக்கூடலுார் சுற்றுலா தலமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படுமா?
கரூர்: கரூர் அருகே, காவிரி மற்றும் அமராவதி ஆறுகள் இணையும் இடத்தில், சுற்றுலாத்தலம் அமைக்க வேண்டும் என கரூர்வாசிகள் எதிர்பார்க்கின்றனர்.
கரூர் மாவட்டம், திருமுக்கூடலுார் பகுதியில், காவிரியாறும், அமராவதி ஆறும் ஒன் றாக இணைகிறது. அதிகப்படியான தண்ணீர் வரும் காலங்களில், மேட்டூர் அணையில் இருந்து
காவிரியாற்றிலும், அமராவதி அணையில் இருந்து, அமராவதி ஆற்றிலும் தண்ணீர் திறந்து விடப்படுகிறது.அந்த இருபெரும் ஆறுகளின் தண்ணீரும், திருமுக்கூடலுாரில் இணையும் போது, அருகில் உள்ள அரங்கநாதன் பேட்டை, புதுப் பாளையம், மறவாப்பாளையம் உள் ளிட்ட, ஐந்துக்கும் மேற்பட்ட கிராமப்பகுதிகளில் உள்ள, நுாற்றுக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்களில் தண்ணீர் புகுந்து விடுகிறது. அதை தடுக்க, திருமுக்கூடலுார் பகுதியில் சுற்றுலா தலம் அமைக்க வேண்டும், அப்போது இப்பகுதியில் அடிப்படை வசதிகள் செய்து தருவர். அப்பகுதியில் பொருளாதார முன்னேற்றமும் ஏற்படும் என, அப்பகுதியினர் கூறுகின்றனர்.
இதுகுறித்து, அப்பகுதியினர் கூறியதாவது: ஈரோடு மாவட்டம், பவானி பகுதியில் பவானி சாகர் அணையில் திறந்து விடப்படும் தண்ணீரும், மேட்டூர் அணையில் திறக்கப்படும் தண்ணீரும், பவானி கூடுதுறையில் இணைகிறது.
இங்கு திருமண தடை நீங்க சடங்கு, குழந்தை வரம் வேண்டி சடங்கு மற்றும் இறந்தவர்களுக்கு சடங்குகள் செய்யப்படுகின்றன. மேலும், ஆடிப்பெருக்கு நாளில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வருகின்றனர்.
அதேபோல், கரூர் திருமுக்கூடலுாரில் காவிரியாறும், அமராவதி ஆறும் இணையும் இடத்தை சுற்றுலா தலமாக மாற்ற வேண்டும். அதற்கு போதுமான இட வசதி உள்ளது.
அப்போது, ஆற்றுப்பகுதியில் வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளப்படும். தடுப்பு சுவர்கள் கட்டப்படும். அதிகப்படியான தண்ணீர், இரண்டு ஆறுகளிலும் வரும் போது, ஊருக்குள் தண்ணீர் செல்வது தடுக்கப்படும்.
ஆடிப்பெருக்கு, அமாவாசை உள்ளிட்ட விசேஷ நாட்களில், கரூர் தவிட்டுப் பாளையம், வாங்கல் மற்றும் நெரூர் பகுதியில் குவியும் பொதுமக்கள், திருமுக்கூடலுாருக்கு வர வாய்ப்பு ஏற்படும். இதனால், திருமுக்கூடலுாரை சுற்றியுள்ள கிராமங்களில், வியாபாரம் பெருகி பொருளாதார வசதி உயரும். இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.