/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
சின்னம்மாள் கோவில் கும்பாபிஷேக நிகழ்ச்சி
/
சின்னம்மாள் கோவில் கும்பாபிஷேக நிகழ்ச்சி
ADDED : டிச 01, 2025 02:29 AM
கிருஷ்ணராயபுரம்: கிருஷ்ணராயபுரம் அடுத்த அரபுளிப்பட்டி கிராமத்தில், சின்-னம்மாள் சுவாமி, செல்லாயி அம்மன் சக்தி, முருகன், மாத்துார் கருப்பு சுவாமி, எதுமலை கருப்பு, சந்தன கருப்பு, சிந்தாமணி காளை, மதுரை வீரன் சுவாமிகள் அடங்கிய புதிய கோவில் கட்-டப்பட்டது.
இக்கோவில் கும்பாபிஷேக விழா, யாக வேள்வி பூஜையுடன் தொடங்கியது. இதில், கணபதி பூஜை, வாஸ்து சாந்தி பூஜை, இரண்டு கால யாக சாலை பூஜைகள் செய்து, நேற்று காலை, கோவில் கோபுர கலசத்திற்கு புனித நீர் எடுத்து செல்லப்பட்டது. தொடர்ந்து, கோவில் கோபுர கலசத்திற்கு கும்பாபிஷேகம் செய்-யப்பட்டு, பக்தர்கள் மீது புனிதநீர் தெளிக்கப்பட்டது. பின், சுவா-மிகளுக்கு தீபாராதனை காட்டப்பட்டது. பக்தர்களுக்கு அன்ன-தானம் வழங்கப்பட்டது. ஏரளமானோர் கலந்துகொண்டனர்.

