sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

குறைதீர் கூட்டத்தில் மனு கொடுக்க முடியாமல் மக்கள் அவதி :கரூர் மாவட்ட கலெக்டர் "கல்தா'

/

குறைதீர் கூட்டத்தில் மனு கொடுக்க முடியாமல் மக்கள் அவதி :கரூர் மாவட்ட கலெக்டர் "கல்தா'

குறைதீர் கூட்டத்தில் மனு கொடுக்க முடியாமல் மக்கள் அவதி :கரூர் மாவட்ட கலெக்டர் "கல்தா'

குறைதீர் கூட்டத்தில் மனு கொடுக்க முடியாமல் மக்கள் அவதி :கரூர் மாவட்ட கலெக்டர் "கல்தா'


ADDED : ஜூலை 12, 2011 12:16 AM

Google News

ADDED : ஜூலை 12, 2011 12:16 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: மக்கள் குறை தீர்க்கும் நாள் முகாமில் காத்திருந்த அø னவரிடமும் மனுக்களை பெறாமல், நேரமாகி விட்டது என கö லக்டர் பாதியில் சென்று விட்டதால் 500க்கும் மேற்பட்ட முதியோர், கைக்குழந்தையுடன் பெ ண்கள், மாற்று திறனாளிகள் கö லக்டரிடம் நேரில் மனு கொடுக் க முடியாமல் தவித்தனர்.

தமிழகம் முழுவதும் மாவட்ட கலெக்டர் பொது மக்களை சந்தித்து மனுக்களைப் பெறவும், பொது மக்களின் குறைகளை நேரில் கேட்கவும் ஒவ்வொரு திங்கள் கிழமையும் அந்தந்த மாவட்ட தலைநகரங்களில் மனுநீதிநாள் முகாம் நடக்கிறது. இந்த முகாமில் மாவட்ட கலெக்ட ரே பொது மக்களிடம் இருந்து மனு க்களை பெறுவார். அதோடு மாவட்டத்தின் அனைத்து பகுதியிலிருந்தும் அனைத்து துறை அதிகாரிகளும் இந்த முகாமில் பங்கு பெறுவர். பொது மக்கள் கூறும் புகார் குறித்து சம்பந்தப்பட்ட துறை தலைமை அதிகாரிக்கு கலெக்டர் நேரடியாக மனுவை கொடுத்து தீர்வு காண உத்தரவிடுவார். இதற்காக, ஒவ்வொரு திங்களன்றும் பொது மக்கள் கலெக்டரிம் நேரடியாக புகார் கொடுத்தால் நம் பிரச்சனை தீர்க்கப்படும் என்ற நம்பிக்கையில் மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் இருந்து, பல நூறு ரூபாய் செலவு செய்தும், சாப்பிடாமலும், பல்வேறு சிரமங்களுக்கு இடையே கலெக்டர் அலுவலகம் வந்து காத்து கிடப்பதுண்டு. கரூர் மாவட்டத்தில் தற்போது மா வட்ட கலெக்டராக ÷ஷாப னா உள்ளார். ஒவ்வொரு திங்கள் கிழமையும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து மனு கொடுக்க ஆயிர கணக்கான பொது மக்கள் இங்கு வருகின்றனர். குறைகளை கூற வரும் பொ து மக்களிடம் முறையாக மனுக்களை பதிவு செய்யாமல், பொ து மக்களை அலைய விடுகின்றனர். இதற்கென உள்ள ஊழியர்கள் முதலில் பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பதிவு செய்ய வேண்டும் என வாங்கி கொள்கின்றனர். ஆண்கள் தனியாக பெண்கள் மனு தனியாக பெயரை வாசிப்போம் என கூறி அங்கே போய் உட்கார், இங்கே போய் உட்கார் என கூறுவதால், ஊழியர்களிடம் கொடுத்த மனு நூற்றுக்கும் மேற்பட்டவர்களுக்கு கிø டக்காமலே குப்பைக்கு போகிறது. நேற்று மனு நீதிநாள் வழக்கம் போல் பத்து மணிக்கு துவங்கியது. ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொது மக்கள் மனுவுடன் காத்திருந்தனர். மதியம் 1 மணி வரை மாவட்ட கலெக்டர் பொது மக்களிடம் மனுக்களை பெற்றார். பின்னர் அலுவலகம் சென்று விட்டார். ஆனால், பொ து மக்களுக்கு உடனே மனுக்களை பதிவு செய்து கொடுக்காமல் போனதால், வெளியில் 500க்கும் மேற்பட்ட பொது மக்கள் மனுக்களை எடுத்துக் கொண்டு மனுநீதி நாள் நடக்கும் இடத்திற்கு ஓடி வந்தனர். இதில் மாற்று திறனாளிகளும், முதியோரும் அங்கும் இங்கும் அலைந்து கொண்டிருந்தது பார்க்க பரிதாமமாக இருந்தது. முகாம் நடக்கும் இடத்திற்கு வந்த பொது மக்கள் மனுக்களை யாரிடம் கொடுப்பது என தெரியாமல் தவித்தனர். அப்போது அங்கு காத்திருந்த ஊழியர் பொது மக்களிடம் இருந்து மனுக்களை பெற்று கொண்டு, இனிமேல் இங்கு வராதீர்கள், போங்கள் போங்கள் என விரட்டி கொண்டிருந்தார். மாலை மூன்று மணி வரையும் பதிவு செய்ய கொடுத்த மனுக்கள் தங்கள் கைக்கு வராமல் 500க்கும் மேற்பட்டவர்கள் காத்திருந்தனர்.






      Dinamalar
      Follow us