/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
மோகனுார் சாலையில் கொளுத்தப்படும்குப்பை: வாகன ஓட்டிகள், மக்கள் அவதி
/
மோகனுார் சாலையில் கொளுத்தப்படும்குப்பை: வாகன ஓட்டிகள், மக்கள் அவதி
மோகனுார் சாலையில் கொளுத்தப்படும்குப்பை: வாகன ஓட்டிகள், மக்கள் அவதி
மோகனுார் சாலையில் கொளுத்தப்படும்குப்பை: வாகன ஓட்டிகள், மக்கள் அவதி
ADDED : ஜன 18, 2025 01:28 AM
- மோகனுார் சாலையில் கொளுத்தப்படும்குப்பை: வாகன ஓட்டிகள், மக்கள் அவதி
கரூர், : கரூர்-நாமக்கல் மாவட்டம் மோகனுார் சாலை விரிவாக்கம் செய்யப்பட்டு, புதிதாக சாலை அமைக்கப்பட்டுள்ளது.
அந்த பகுதியில் அதிகளவில் குப்பை கொட்டப்பட்டுள்ளது. அதை, மாநகராட்சி நிர்வாகம் நாள் தோறும் அகற்றுவது இல்லை.
இதனால், அந்த பகுதியில் குப்பை பெரும்பாலும், சாலைகளில் குவிக்கப்பட்டு, தீ வைத்து எரிக்கப்படுகிறது.
அதில், தேங்கியுள்ள பிளாஸ்டிக் பொருட்களும்
எரிவதால், துர்நாற்றமும், பெரும் சுகாதார கேடும் ஏற்படுகிறது. இதுகுறித்து, சம்பந்தப்பட்ட பகுதிகளை சேர்ந்த, பொது மக்கள் புகார் தெரிவித்தும், கரூர் மாநகராட்சி அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் உள்ளனர்.
இந்நிலையில், நேற்று மோகனுார் சாலையில் இருந்த குப்பை தீ வைத்து கொளுத்தப் பட்டது. அந்த பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சி யளித்தது. அந்த பகுதியினர், வீட்டை விட்டு வெளியே வர முடியாமல் தவித்தனர். வாகன ஓட்டிகளும் பெரும் சிரமத்துக்குள்ளாகினர்.
கரூர்-மோகனுார் சாலையில் குப்பை, தீ வைத்து கொளுத்துவதை தடுக்க, கரூர் மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.