/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
வட்டியை குறைத்து தருவதாக பண மோசடி: மர்ம நபரை தேடும் போலீசார்
/
வட்டியை குறைத்து தருவதாக பண மோசடி: மர்ம நபரை தேடும் போலீசார்
வட்டியை குறைத்து தருவதாக பண மோசடி: மர்ம நபரை தேடும் போலீசார்
வட்டியை குறைத்து தருவதாக பண மோசடி: மர்ம நபரை தேடும் போலீசார்
ADDED : பிப் 08, 2025 12:52 AM
வட்டியை குறைத்து தருவதாக பண மோசடி: மர்ம நபரை தேடும் போலீசார்
கரூர்: கரூர் அருகே, வீட்டு கடனுக்கு வட்டியை குறைத்து தருவதாக கூறி, டிராவல்ஸ் அதிபரிடம், பணம் பறித்த மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
கரூர் மாவட்டம், ராமானுார் ராஜா நகரை சேர்ந்தவர் ரங்கராஜ், 53; டிராவல்ஸ் அதிபர். இவர், ரெப்கோ வங்கியில், 25 லட்ச ரூபாய் வீட்டு லோன் வாங்கியுள்ளார்.
இந்நிலையில், வீட்டு லோனுக்கு வட்டியை குறைத்து தருவதாகவும், ரெப்கோ வங்கியில் உயர் அதிகாரிகளை தமக்கு தெரியும் எனவும், சேலம் அழாகாபுரத்தை சேர்ந்த விஜயகுமார், 45; என்பவர், ரங்கராஜை அணுகி பேசியுள்ளார். அதை உண்மை என நம்பிய ரங்கராஜ், இரண்டு தவணைகளில், மூன்று லட்சத்து, 50 ஆயிரம் ரூபாயை, விஜயகுமாருக்கு கொடுத்துள்ளார். ஆனால், வீட்டு கடனுக்காக வட்டியை விஜயகுமார் குறைத்து தரவில்லை. பணத்தையும் திருப்பி தரவில்லை.
இதுகுறித்து, ரங்கராஜ் போலீசில் புகார் செய்தார். இதையடுத்து, பசுபதிபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விஜயகுமாரை தேடி வருகின்றனர்.