/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
மாணவர்கள் நலன் கருதி மொழி வெறியை துாண்டாதீர்காவிரி பாசன விவசாயிகள் நலச்சங்கம் வேண்டுகோள்

ADDED : பிப் 20, 2025 02:02 AM
மாணவர்கள் நலன் கருதி மொழி வெறியை துாண்டாதீர்காவிரி பாசன விவசாயிகள் நலச்சங்கம் வேண்டுகோள்
கரூர்:'தமிழக மாணவர், மாணவியர் நலன் கருதி மொழி வெறியை துாண்ட வேண்டாம்' என, காவிரி பாசன விவசாயிகள் நலச்சங்க தலைவர் மகாதானபுரம் ராஜாராம் தெரிவித்துள்ளார்.
அவர், வெளியிட்ட அறிக்கை:தமிழகத்தில், அரசு பள்ளிகளில் இலவசமாக கல்வி கற்றுக் கொடுக்கப்பட்டு வருகிறது. காலை, மதிய உணவு, உடை, புத்தகம், சைக்கிள், பஸ் வசதி போன்ற பல்வேறு இலவச திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. ஆனாலும், கிராமத்து ஏழை மக்கள், விவசாயிகள் தங்கள் குழந்தைகளை, தனியார் பள்ளிக்கு அதிக செலவழித்து பஸ்சில் அனுப்புகின்றனர். எல்.கே.ஜி., முதலே தன் நிலை மீறி செலவு செய்து வருகின்றனர்.
கரூர் மாவட்டம் மகாதானபுரத்தில் இருந்து திருச்சி, கரூர், நாமக்கல் உள்பட பல்வேறு பகுதிகளுக்கு, 10க்கும் அதிகமான தனியார் பள்ளி வாகனங்கள் மூலம் மாணவர், மாணவியர் சென்று படித்து வருகின்றனர். இப்படி, கடன் வாங்கி படிப்புக்காக, 15 ஆண்டு செலவழிக்க வேண்டிய கட்டாயத்தில் ஏழை பெற்றோர் உள்ளனர். இப்போது ஆங்கிலம், ஹிந்தி போன்ற பல மொழிகள், கம்ப்யூட்டர் படிக்க வைக்க வேண்டும் என்று நினைக்கின்றனர்.
எங்கள் கஷ்டம் எங்களோடு போகட்டும், எங்கள் குழந்தைகளாவது நன்றாக படித்து வேலைக்கு போகட்டும் என்று எண்ணம் உள்ளது. டாக்டர், இன்ஜினியர் ஆகவில்லை என்றால் கூட பரவாயில்லை. நல்ல வேலை கிடைத்தால் போதும் என்று ஏழை, நடுத்தர பெற்றோர் நினைக்கின்றனர். தமிழ் மாணவர்களுக்கு சரியாக வழிகாட்டினால் போதும், தாவி குதித்து முன்னேறி விடுவர்.
தமிழக மாணவ, மாணவியர் நலன் கருதி, மொழிவெறியை அரசியல் கட்சிகள் துாண்ட வேண்டாம். மத்திய அரசின் கல்வி கொள்கையை ஏற்று, நல்ல அரசு பள்ளிகளை தொடங்க வழி விடுங்கள். தமிழன் எவ்வளவு மொழியானாலும் படிக்க அஞ்சமாட்டான். ஏழை, நடுத்தர குடும்பத்தை சேர்ந்த மாணவர்களின் கஷ்டங்கள் குறையும். கல்வியில் அரசியல் வேண்டாம், எதிர்கால சிந்தனை இருந்தால் போதும்.
இவ்வாறு கூறப்பட்டுள்ளது.