/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கரூர் அருகே ஏ.சி., மிஷினில் தீ வீட்டு உபயோக பொருட்கள் நாசம்
/
கரூர் அருகே ஏ.சி., மிஷினில் தீ வீட்டு உபயோக பொருட்கள் நாசம்
கரூர் அருகே ஏ.சி., மிஷினில் தீ வீட்டு உபயோக பொருட்கள் நாசம்
கரூர் அருகே ஏ.சி., மிஷினில் தீ வீட்டு உபயோக பொருட்கள் நாசம்
ADDED : பிப் 22, 2025 01:51 AM
கரூர் அருகே ஏ.சி., மிஷினில் தீ வீட்டு உபயோக பொருட்கள் நாசம்
கரூர்:கரூர் அருகே, வீட்டில் உள்ள ஏ.சி., மிஷினில் தீ விபத்து ஏற்பட்டதால் வீட்டு உபயோக பொருட்கள் நாசமாயின.
கரூர் மாவட்டம், காதப்பாறை பஞ்சாயத்து, அன்பு நகர், நான்காவது கிராஸ் பகுதியை சேர்ந்தவர் சதாசிவம், 60; இவர் மனைவி கிருஷ்ணவேணி, மகன் ராசையா என்பவருடன் மாடி வீட்டில் வசித்து வருகிறார். இவர்கள் மூவரும், நேற்று காலை வீட்டை பூட்டி விட்டு இருந்து வெளியே சென்றிருந்தனர்.
இந்நிலையில், நேற்று காலை மாடி வீட்டின் வெளிப்புறம் வைக்கப்பட்டிருந்த ஏ.சி., மிஷினில் தீ பிடித்தது. அந்த தீ வீட்டுக்குள் பரவி, பெரும் புகை ஏற்பட்டது. கரூர் தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர். ஆனால் வீட்டில் இருந்த 'டிவி' உள்ளிட்ட பொருட்கள் தீயில் எரிந்து நாசமாயின.