/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
குளித்தலை: கூடலூரில் தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தில் தூர் வாரும் பணியில்

ADDED : ஜூலை 26, 2011 12:50 AM
ஈடுப்பட்டிருந்த 22 பெண்கள் உள்ளிட்ட 23 பேரை விஷ வண்டுகள் கடித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
கரூர் மாவட்டம் தோகமலை பஞ்சாயத்து யூனியன் கூடலூரில் தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் தூர்வாரும் பணி நேற்று நடந்தது. அதில் பெண்கள் உள்பட 229 பேர் வேலை செய்து கொண்டிருந்தனர். நேற்று மதியம் 12 மணியளவில் திடீரென வந்த விஷ வண்டுகள், வேலை செய்து கொண்டிருந்த தொழிலாளர்களை விரட்டி விரட்டி கடித்தது. இதனால் சிலருக்கு உடலில் வீக்கம் ஏற்பட்டு, வலியால் துடித்தனர். உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மூலம் படுகாயம் அடைந்தவர்களில் 22 பெண்கள் மற்றும் ஒரு ஆண் ஆகியோர் குளித்தலை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். அவர்களை தோகமலை பஞ்சாயத்து யூனியன் துணை அலுவலர் புவனேஸ்வரி, மேலாளர் ராஜேந்திரன், கிளார்க் சக்திவேல் ஆகியோர் பார்வையிட்டு ஆறுதல் கூறினர்.