/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
திறந்த நிலையில் தென்னை மட்டை ஏற்றிசெல்லும் வாகனங்களால் விபத்து அபாயம்

ADDED : ஜன 24, 2025 01:41 AM
திறந்த நிலையில் தென்னை மட்டை ஏற்றிசெல்லும் வாகனங்களால் விபத்து அபாயம்
கரூர், : சாலைகளில் திறந்த நிலையில், தென்னை மட்டைகளை ஏற்றிச் செல்வதால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது.
வேலாயுதம்பாளையம், வாங்கல் போன்ற காவிரி ஆற்றங்கரையோர பகுதிகளில், அதிகளவு தென்னை மரங்கள் உள்ளன. ஈரோடு மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் தென்னை நார் தொழிற்சாலைகள் உள்ளன. இதுபோன்ற தொழிற்சாலைகளுக்கு, தென்னை மட்டைகள் பல்வேறு பகுதிகளில் இருந்து வேன், லாரிகளில் கொண்டு செல்லப்படுகிறது. தென்னை மட்டைகளை ஏற்றிச் செல்லும் பெரும்பாலான வாகனங்கள், மேற்புறம் திறந்த நிலையில் கொண்டு செல்லப்படுவதால், சில மட்டைகள் சாலைகளில் விழுகிறது. இதனால் பின்னால், வரும் வாகனங்கள் விபத்துகளில் சிக்கி கொள்ளும் அபாயம் உள்ளது.
சாலையின் மைய பகுதியில் விழுந்து கிடக்கும் மட்டைகளால், பைபாஸ் சாலைகளில் செல்லும் இரு சக்கர வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி விழுகின்றனர். எனவே, தென்னை மட்டைகள் ஏற்றிச் செல்லும் வாகனங்கள், பாதுகாப்பான முறையில் கொண்டு செல்ல, தேவையான அறிவுரைகளை அதிகாரிகள் வழங்க வேண்டும். மீறி செல்லும் வாகனங்கள் மீது, கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.