/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
குடிநீர் கட்டணம் ரத்து செய்ய கோரிபா.ஜ., கவுன்சிலர் உள்ளிருப்பு போராட்டம்

ADDED : ஜன 30, 2025 01:21 AM
குடிநீர் கட்டணம் ரத்து செய்ய கோரிபா.ஜ., கவுன்சிலர் உள்ளிருப்பு போராட்டம்
கரூர் ;குடிநீர் வினியோகம் செய்யாத மாதத்திற்கு, கட்டணத்தை ரத்து செய்ய கோரி, பா.ஜ., கவுன்சிலர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.
கரூர் மாவட்டம், புலியூர் டவுன் பஞ்சாயத்து பகுதியில், காவிரி ஆற்றின் கட்டளை நீரேற்று நிலையத்தில் இருந்து, குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. கடந்த டிசம்பரில், காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால், டவுன் பஞ்., குடிநீர் ஆதாரமான கட்டளை பகுதியில், காவிரி ஆற்றில் அமைக்கப்பட்டிருந்த நீரேற்று நிலையத்தின் குழாய்கள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன. குழாய் சீரமைக்கும் பணி ஆமை வேகத்தில் நடந்தது.
கடந்த, 10 நாட்களுக்கு முன் காவிரி குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது. நேற்று நடந்த புலியூர் டவுன் பஞ்., கூட்டத்தில், பா.ஜ., 4வது வார்டு கவுன்சிலர் விஜயகுமார், ஒரு மாதத்திற்கு மேலாக காவிரி குடிநீர் வினியோகம் செய்யவில்லை. அந்த மாதம் குடிநீர் கட்டணம் வசூல் செய்யக்கூடாது. எனவே குடிநீர் கட்டணம் ரத்து கோரி தீர்மானம் நிறைவேற்ற கோரினார். அதற்கு, புலியூர் டவுன் பஞ்., செயல் அலுவலர் கிருஷ்ணன் மறுப்பு தெரிவித்தார்.
கூட்டம் முடிந்த பின், டவுன் பஞ், வளாகத்தில் குடிநீர் வினியோகம் செய்யாத மாதத்திற்கு கட்டணம் ரத்து செய்ய கோரி, கவுன்சிலர் விஜயகுமார் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். தனது கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் என
தெரிவித்தார்.