/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
காவிரியாற்றில் தை அமாவாசையையொட்டிமுன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க குவிந்த மக்கள்

ADDED : ஜன 30, 2025 01:23 AM
காவிரியாற்றில் தை அமாவாசையையொட்டிமுன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க குவிந்த மக்கள்
கரூர்:கரூர் அருகே நெரூர் காவிரியாற்றில், தை அமாவாசையையொட்டி, முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க, பொதுமக்கள் குவிந்தனர்.
தை அமாவாசயையொட்டி, புனித நீர்நிலைகளில் நீராடி, முன்னோர்களுக்கு திதி கொடுத்து தர்ப்பணம் செய்வது வழக்கம். நேற்று தை அமாவாசை என்பதால், கரூர் மாவட்டத்தில் காவிரியாற்று பகுதிகளான தவிட்டுப்பாளையம், நன்னியூர் புதுார், வாங்கல், நெரூர், கட்டளை, மாயனுார், லாலாப்பேட்டை, குளித்தலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில், பொதுமக்கள் ஆற்றில் புனித நீராடி, முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.
மேலும், தை அமாவாசையையொட்டி நேற்று கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவில், மாரியம்மன் கோவில், தான்தோன்றிமலை கல்யாண வெங்கடரமண சுவாமி கோவில், அண்ணா நகர் கற்பக விநாயகர் கோவில்களில் பொதுமக்கள் சுவாமியை வழிபட்டனர்.
* கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட, மாயனுார் செல்லாண்டியம்மன் கோவில் காவிரி படுகை, லாலாப்பேட்டை காவிரி படுகை,, கருப்பத்துார் சிவன் கோவில் காவிரி படுகை ஆகிய இடங்களில், நேற்று காலை தை மாத அமாவாசையை முன்னிட்டு முன்னோர்களுக்கு திதி, தர்ப்பணம் கொடுக்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில், முன்னோர்களுக்கு வழிபாடு செய்யும் வகையில், காவிரி ஆற்றில் மக்கள் குளித்து விட்டு, வேத மந்திரங்கள் கூறி திதி, தர்ப்பணம் வழங்கினர். ஏராளமானோர் கலந்து கொண்டனர். மேலும் கால்நடைகளுக்கு அகத்தி கீரை தரப்பட்டது. காவிரி ஆற்று படுகை பகுதியில் மக்கள் கூட்டம் அதிகம் காணப்பட்டது.
* குளித்தலை, கடம்பன் துறை காவிரி ஆற்றில் நீராடிவிட்டு, கடம்பவனேஸ்வரரை தரிசனம் செய்தால், காசிக்கு சென்ற புண்ணியம் கிடைக்கும் என்பது ஐதீகம். நேற்று காலை தை அமாவாசையொட்டி, பொதுமக்கள் ஆற்றில் நீராடி, முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.
பின், கடம்பவனேஸ்வரரை தரிசனம் செய்தனர். நுாற்றுக்கணக்கானோர் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.