/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
பொது கழிப்பிடம் கட்ட எதிர்ப்புநான்கு பேர் மீது வழக்கு பதிவு
/
பொது கழிப்பிடம் கட்ட எதிர்ப்புநான்கு பேர் மீது வழக்கு பதிவு
பொது கழிப்பிடம் கட்ட எதிர்ப்புநான்கு பேர் மீது வழக்கு பதிவு
பொது கழிப்பிடம் கட்ட எதிர்ப்புநான்கு பேர் மீது வழக்கு பதிவு
ADDED : மார் 01, 2025 01:34 AM
பொது கழிப்பிடம் கட்ட எதிர்ப்புநான்கு பேர் மீது வழக்கு பதிவு
குளித்தலை: கிருஷ்ணராயபுரம் டவுன் பஞ்., சார்பில், துாய்மை இந்தியா திட்டத்தின் கீழ் கிழக்கு காலனி, 10-வது வார்டில் கடந்த, 17ல் பூமி பூஜை செய்ய சென்றபோது, அப்பகுதியை சேர்ந்த தியாகராஜன், 55, இளையராஜா, 46, ரூபக், 33, மகாமுனி, 32, ஆகியோர், 'சம்பந்தப்பட்ட இடம் எங்களுக்கு சொந்தமானது. இங்கு பொது கழிப்பிடம் கட்டக்கூடாது' என தகாத வார்த்தையால் பேசி பணி செய்ய விடாமல் தடுத்தனர். தற்போது கட்டுமான பணி நடந்து வரும் நிலையில் கடந்த, 25 காலை 10:00 மணியளவில் கட்டுமான பணி செய்ய விடாமல் மிரட்டல் விடுத்து தடுத்தனர். இது குறித்து, செயல் அலுவலர் ருக்மணி கொடுத்த புகார்படி, நான்கு பேர் மீதும் மாயனுார் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.