/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கரூர் கோவில்களில் வைகுண்ட ஏகாதசி திருவிழா: பக்தர்கள் பரவசம்
/
கரூர் கோவில்களில் வைகுண்ட ஏகாதசி திருவிழா: பக்தர்கள் பரவசம்
கரூர் கோவில்களில் வைகுண்ட ஏகாதசி திருவிழா: பக்தர்கள் பரவசம்
கரூர் கோவில்களில் வைகுண்ட ஏகாதசி திருவிழா: பக்தர்கள் பரவசம்
ADDED : ஜன 11, 2025 01:37 AM
கரூர், :கரூர் அபய பிரதான ரங்கநாத சுவாமி கோவிலில், நேற்று வைகுண்ட ஏகாதசியையொட்டி நடந்த, சொர்க்கவாசல் திறப்பு விழாவில் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
கரூரில், பிரசித்தி பெற்ற அபய பிரதான ரங்கநாத சுவாமி கோவிலில் கடந்த, 31ல் வைகுண்ட ஏகாதசி திருவிழா, பகல் பத்து உற்சவத்துடன் தொடங்கியது. நேற்று முன்தினம் இரவு, மூலவர் மோகினி அலங்காரம், நாச்சியார் திருக்கோலத்தில், பக்தர்களுக்கு அருள் பாலித்தார். அதை தொடர்ந்து நேற்று அதிகாலை, 4:30 மணிக்கு சொர்க்கவாசல் திறப்பு விழா நடந்தது. அதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமியை வழிபட்டனர்.
* கரூர் பண்டரிநாதன் கோவிலில், சொர்க்க வாசல் திறப்பு விழா நேற்று அதிகாலை, 4:30 மணிக்கு நடந்தது. முன்னதாக, மூலவர் முத்தங்கி சேவையில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். சொர்க்கவாசல் திறப்புக்கு பிறகு, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
* கரூர் அருகே சேங்கல் மலை வரதராஜ பெருமாள் கோவிலில், நேற்று அதிகாலை சொர்க்க வாசல் திறப்பு விழா நடந்தது. முன்னதாக, கோவிலில் விஷ்ணு சஹஸ்ர நாம பாராயணம், வைகுந்த துவார பூஜைகள் நடந்தது. ஏராளமான பக்தர்கள் சுவாமியை வழிபட்டனர்.
* குளித்தலை, நீலமேகப் பெருமாள் கோவிலில் நேற்று அதிகாலை, 5:30 மணியளவில் சொர்க்க வாசல் திறப்பு விழா நடந்தது. ஏராளமானோர் சுவாமி தரிசனம் செய்தனர்.
மூலவர் உற்சவ பெருமாள் முத்தங்கி சேவையில், பக்தர்களுக்கு காட்சியளித்தார். கோவில் நிர்வாகம் சார்பில் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.
இதேபோல். குளித்தலை அக்ரஹாரத்தில் அமைந்துள்ள லட்சுமி நாராயண பெருமாள் கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடந்தது.
* கிருஷ்ணராயபுரம், லட்சுமி நாராயண பெருமாள் கோவிலில் நேற்று அதிகாலை, 5:30 மணிக்கு லட்சுமி நாராயணப்பெருமாள், லட்சுமி தேவியுடன் சிறப்பு அலங்காரம் செய்து சொர்க்கவாசல் வழியாக வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதை முன்னிட்டு கோவிலில் உள்ள மற்ற சுவாமிகளான
ஆஞ்சநேயர், ராமானுஜர்,
கருடாழ்வார்களுக்கு சிறப்பு
அலங்காரம் செய்து வழிபாடு பூஜைகள் நடந்தது.தொடர்ந்து சொர்க்க வாசல் வழியாக வந்த பெருமாள் உற்சவர், கோவிலை சுற்றி கொண்டு வரப்பட்டு உள் பகுதியில்
வைக்கப்பட்டார். பக்தர்கள் பெருமாளை வணங்கினர். பின் பிரசாதம் வழங்கப்பட்டது.
* மகாதானபுரம் அக்ரஹாரத்தில் லட்சுமி நாராயணப் பெருமாள் மற்றும் கல்யாண வரதராஜ பெருமாள் கோவில்களில், சிறப்பு அலங்காரத்தில் பெருமாள் காட்சியளித்தார்.