/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
லட்சுமி நாராயண பெருமாள் கோவிலில் சிறப்பு வழிபாடு
/
லட்சுமி நாராயண பெருமாள் கோவிலில் சிறப்பு வழிபாடு
ADDED : ஜன 12, 2025 01:13 AM
லட்சுமி நாராயண பெருமாள் கோவிலில் சிறப்பு வழிபாடு
கிருஷ்ணராயபுரம்,:கிருஷ்ணராயபுரம், லட்சுமி நாராயண பெருமாள் கோவிலில் நேற்று சிறப்பு வழிபாடு பூஜை நடந்தது.
கிருஷ்ணராயபுரத்தில், லட்சுமி நாராயண பெருமாள் கோவில் உள்ளது. இங்கு, நேற்று முன்தினம் சொர்க்கவாசல் வழியாக லட்சுமி நாராயண பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் வந்து, பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
நேற்று காலை முதல், பெருமாளுக்கு சிறப்பு வழிபாடு பூஜை நடந்தது. இதில் கிருஷ்ணராயபுரம் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த, ஏராளமானோர் கலந்து கொண்டு, சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதமாக சர்க்கரை பொங்கல், வெண் பொங்கல் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகம் செய்திருந்தது.