/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்., பிறந்த நாள் விழா கோலாகலம்
/
முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்., பிறந்த நாள் விழா கோலாகலம்
முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்., பிறந்த நாள் விழா கோலாகலம்
முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்., பிறந்த நாள் விழா கோலாகலம்
ADDED : ஜன 18, 2025 01:25 AM
கரூர், : அ.தி.மு.க., நிறுவன தலைவரும், முன்னாள் முதல்வருமான எம்.ஜி.ஆர்., 108 வது பிறந்த நாள் விழா கரூரில் நேற்று நடந்தது.
கரூர் மாவட்ட அ.தி.மு.க., சார்பில், மாவட்ட அவைத்தலைவர் திருவிகா தலைமையில், அக்கட்சியினர் லைட் ஹவுஸ் கார்னரில் உள்ள, எம்.ஜி.ஆர்., சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அதைதொடர்ந்து, மறைந்த முதல்வர்கள் அண்ணாதுரை, ஜெயலலிதா சிலை களுக்கும் மாலை அணிவிக்கப்பட்டது. மாநில எம்.ஜி.ஆர்., மன்ற துணை செயலாளர் சிவசாமி, மாவட்ட ஜெ., பேரவை செயலாளர் நெடுஞ்
செழியன், ஒன்றிய செயலாளர் கமலகண்ணன், முன்னாள் பஞ்., யூனியன் தலைவர் பாலமுருகன் உள்பட பலர் பங்கேற்றனர்.
அதை தவிர, கரூர் மாவட்டத்தில் பல இடங்களில், அ.தி.மு.க., சார்பு அணிகள் மற்றும் பொதுமக்கள் சார்பில், எம்.ஜி.ஆர்., படம் வைக்கப்பட்டு, மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.