/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கோவை-மயிலாடுதுறை ஜன்சதாப்தி ரயில் முன்பதிவில்லாத டிக்கெட் வழங்க வேண்டுகோள்
/
கோவை-மயிலாடுதுறை ஜன்சதாப்தி ரயில் முன்பதிவில்லாத டிக்கெட் வழங்க வேண்டுகோள்
கோவை-மயிலாடுதுறை ஜன்சதாப்தி ரயில் முன்பதிவில்லாத டிக்கெட் வழங்க வேண்டுகோள்
கோவை-மயிலாடுதுறை ஜன்சதாப்தி ரயில் முன்பதிவில்லாத டிக்கெட் வழங்க வேண்டுகோள்
ADDED : ஜன 18, 2025 01:29 AM
கோவை-மயிலாடுதுறை ஜன்சதாப்தி ரயில் முன்பதிவில்லாத டிக்கெட் வழங்க வேண்டுகோள்
கரூர்,: கோவையில் இருந்து ஈரோடு, கரூர் வழியாக, மயிலாடுதுறைக்கு இயக்கப்படும், ஜன்சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயிலில், முன்பதிவில்லாத டிக்கெட்டுகள் வழங்க வேண்டும் என, பயணிகள் வேண்டு கோள் விடுத்துள்ளனர்.
கடந்த, 2003ம் ஆண்டு ஜன, 20 முதல் கோவையில் இருந்து மயிலாடுதுறைக்கு, ஜன்சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த, 21 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த டிச., 27 முதல் கோவை-மயிலாடுதுறை இடையே இயக்கப்படும் ரயிலில், பெட்டிகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன. அதன்படி, அதிக விசாலமான இடம் கொண்ட எல்.எச்.பி., பெட்டிகளில், லிங்க் ஹாபேமேன் புஷ் வசதி
மேம்படுத் தப்பட்டுள்ளது.இந்த ரயில் நாள்தோறும் காலை, 7:15 மணிக்கு கோவை ரயில் ஸ்டேஷனில் இருந்து புறப்பட்டு, 9:30 மணிக்கு கரூர் வந்து சேரும். அதே போல், நாள்தோறும் மதியம், 3:10 மணிக்கு மயிலாடு துறையில் இருந்து புறப்பட்டு, மாலை, 6:40 மணிக்கு கரூர் வரும்.
சொகுசு இருக்கைகள் கொண்ட, இந்த ரயிலில் முன்பதிவு செய்தால் மட்டுமே பயணம் செய்ய முடியும். முன்பதிவு
செய்யாமல், இந்த ரயிலில் பயணம் செய்ய முடியாது. இதனால், கோவை, திருப்பூர், கரூர், திருச்சி, தஞ்சாவூர் மற்றும் திருவாரூர் மாவட்டங்களை சேர்ந்த,
பயணிகள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.இதுகுறித்து, பயணிகள் கூறியதாவது:கோவை-மயிலாடுதுறை ஜன்சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயிலில், முன்பதிவு செய்யும் பயணிகள் சென்றாலும், பெரும்பாலான இருக்கைகள் காலியாகவே உள்ளன. ஆனால், முன்பதிவு செய்யாமல் இந்த ரயிலில் பயணம் செய்ய முடியவில்லை. அதிவேகத்தில் செல்லும் இந்த ரயில், 364 கிலோ மீட்டரில், எட்டு ஸ்டேஷன்களில், மட்டும் நின்று செல்கிறது.
தமிழகத்தில், பஸ் கட்டணம் அதிகமாக உள்ள நிலையில், முன்பதிவு செய்யாமல் டிக்கெட் வாங்கி பயணம் செய்ய, நடவடிக்கை எடுக்க வேண்டும். பயணம் செய்யும் நாளில், முன்பதிவு செய்யும் போது, சீட் இல்லை என்ற தகவல் இணைய தளத்தில் உள்ளது. ஆனால், இருக்கைகள் காலியாகவே உள்ளன.
இதனால், முன்பதிவில்லாத டிக்கெட்டை வினியோகம் செய்து விட்டு, ரயிலில் பரிசோதகர் மூலம் கூடுதலாக, 15 ரூபாய் முன்பதிவு கட்டணம் வசூலிக்கலாம். அதன் மூலம், ரயில்வே துறைக்கும் கூடுதலாக
வருமானம் கிடைக்கும். அனைத்து தரப்பு பயணிகளுக்கும், இந்த ரயில் பயனுள்ளதாக இருக்கும்.இவ்வாறு தெரிவித்தனர்.