/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
தரம் குறைந்த நகைகளை அடமானம் பெற்ற மதிப்பீட்டாளருக்கு 'காப்பு'
/
தரம் குறைந்த நகைகளை அடமானம் பெற்ற மதிப்பீட்டாளருக்கு 'காப்பு'
தரம் குறைந்த நகைகளை அடமானம் பெற்ற மதிப்பீட்டாளருக்கு 'காப்பு'
தரம் குறைந்த நகைகளை அடமானம் பெற்ற மதிப்பீட்டாளருக்கு 'காப்பு'
ADDED : பிப் 02, 2025 01:11 AM
தரம் குறைந்த நகைகளை அடமானம் பெற்ற மதிப்பீட்டாளருக்கு 'காப்பு'
கரூர்: போலி ஆவணங்கள், தரம் குறைந்த நகைகளை அடமானம் பெற்று, 1.42 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுத்திய, கனரா வங்கி நகை மதிப்பீட்டாளரை, மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.
நாமக்கல் மண்டல கனரா வங்கி தலைமை மேலாளர் ராஜேஷ், 41; இவர், கரூர் மாவட்டம், குளித்தலையில் உள்ள கனரா வங்கி கிளையில் சமீபத்தில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, போலியான ஆவணங்கள் மற்றும் தரம் குறைந்த, 3,030.2 கிராம் தங்க நகைகளை, 10 பேரிடம் அடமானம் பெற்று, ஒரு கோடியே, 42 லட்சத்து, 59,000 ரூபாய் இழப்பு ஏற்படுத்தியதாக, வங்கியின் நகை மதிப்பீட்டாளரான, குளித்தலை ராஜேந்திரம் பகுதியை சேர்ந்த பாஸ்கர், 38, என்பவர் மீது, கரூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகாரளித்தார்.
இதையடுத்து, மாவட்ட குற்றப்பிரிவு போலீசார், தங்க நகை மதிப்பீட்டாளர் பாஸ்கரை கைது செய்தனர். மேலும், தங்க நகைளை அடமானம் வைத்த மோகன், கோபாலகிருஷ்ணன், நடராஜன், ராஜமாணிக்கம், அருண்குமார், சாரதா, லோகேஸ்வரி, சரவணன், வருண்குமார், தண்டாயுதபாணி ஆகிய, 10 பேரை தேடி வருகின்றனர்.