/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வெற்றி கரூரில் தி.மு.க.,வினர் கொண்டாட்டம்

ADDED : பிப் 09, 2025 01:01 AM
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வெற்றி கரூரில் தி.மு.க.,வினர் கொண்டாட்டம்
கரூர் பஸ் ஸ்டாண்ட் மனோகரா ரவுண்டானாவில், மாவட்ட தி.மு.க., சார்பில், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வெற்றி கொண்டாட்டம் நடந்தது. கரூர் மாநகர செயலாளர் கனகராஜ் தலைமை வகித்தார். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் கடந்த, 5ல் நடந்தது.
இதில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டன. தி.மு.க., வேட்பாளர் சந்திரகுமார், 90 ஆயிரம் ஓட்டுகள் வித்தியாசத்தில், நா.த.க., வேட்பாளர் சீதாலட்சுமியை தோற்கடித்தார். நா.த.க., டிபாசிட் இழந்தது. இதையடுத்து, தி.மு.க.,வினர் பட்டாசு வெடித்தும், நடனமாடியும், பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கியும் கொண்டாடினர்.
துணை மேயர் தாரணி சரவணன், மண்டல தலைவர் ராஜா, கரூர் மாநகர பகுதி செயலர்கள் கணேசன், குமார், ஜோதிபாசு உள்பட பலர் பங்கேற்றனர்.