/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
தங்க செயின் தருவதாக கூறி ஏமாற்றிய தம்பதி மீது வழக்கு
/
தங்க செயின் தருவதாக கூறி ஏமாற்றிய தம்பதி மீது வழக்கு
தங்க செயின் தருவதாக கூறி ஏமாற்றிய தம்பதி மீது வழக்கு
தங்க செயின் தருவதாக கூறி ஏமாற்றிய தம்பதி மீது வழக்கு
ADDED : பிப் 09, 2025 01:02 AM
தங்க செயின் தருவதாக கூறி ஏமாற்றிய தம்பதி மீது வழக்கு
கரூர்: கரூரில், தங்க செயின் செய்து தருவதாக கூறி, ஏமாற்றிய கணவன், மனைவி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
கரூர், மேட்டு தெருவை சேர்ந்தவர் பார்த்தசாரதி, 46; தங்க நகை செய்யும் தொழில் செய்து வருகிறார். இவர் கடந்த, 2021 மார்ச் மாதம் கரூர் ஒத்தக்கடை பகுதியை சேர்ந்த முருகானந்தம், 45; அவரது மனைவி சத்திய லட்சுமி, 35; ஆகியோரிடம், 13 பவுன் தங்கத்தை கொடுத்து, செயின் செய்து தர ஆர்டர் கொடுத்துள்ளார்.
ஆனால், இருவரும் குறிப்பிட்ட நேரத்தில், தங்க செயினை செய்து தரவில்லை. இதுகுறித்து, பார்த்த சாரதி போலீசில் புகார் செய்தார். இதையடுத்து, கரூர் டவுன் போலீசார், முருகானந்தம், சத்திய லட்சுமி தம்பதி மீது வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.