/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
மூன்றாவது மொழி கற்பது எங்கள் எதிர்காலம் சிறக்கும், வேலைவாய்ப்பு பெருகும்
/
மூன்றாவது மொழி கற்பது எங்கள் எதிர்காலம் சிறக்கும், வேலைவாய்ப்பு பெருகும்
மூன்றாவது மொழி கற்பது எங்கள் எதிர்காலம் சிறக்கும், வேலைவாய்ப்பு பெருகும்
மூன்றாவது மொழி கற்பது எங்கள் எதிர்காலம் சிறக்கும், வேலைவாய்ப்பு பெருகும்
ADDED : பிப் 22, 2025 01:51 AM
மூன்றாவது மொழி கற்பது எங்கள் எதிர்காலம் சிறக்கும், வேலைவாய்ப்பு பெருகும்
மனம் திறக்கும் மாணவர்கள்
மத்திய அரசின் புதிய கல்விக்கொள்கைக்கு வேறு எந்த மாநிலத்திலும் வராத எதிர்ப்பு தமிழகத்தில் எழுந்துள்ளது. புதிய கல்விக்கொள்கையின் படி மாணவர்கள் பள்ளியில் மூன்று மொழியை கற்கவேண்டும். முதலில் தாய்மொழி, அடுத்து ஆங்கிலம், மூன்றாவதாக எந்த மொழியையும் கற்கலாம். ஹிந்தியை தான் கற்க வேண்டும் என்று நிர்பந்தம் இல்லை. ஆனால் ஹிந்தியை மத்திய அரசு திணிக்கிறது என்று தமிழகத்தில் கருத்து பரவுகிறது. அண்டை மாநிலமான கேரளாவில் காங்., ஆட்சியில் இருந்த போதும் சரி, தற்போது மார்க்சிஸ்ட் ஆட்சியிலும் சரி அங்கு மூன்று மொழிகள் கற்பிக்கப்படுகின்றன. இதனால் தான் அதிக கல்வி அறிவு பெற்ற மாநிலமாக கேரளா திகழ்கிறது. காங்., ஆளும் கர்நாடகாவிலும் மூன்றாவது மொழியை கற்பிக்கின்றனர். மாணவர்கள் விரும்பி கற்பதை தமிழக அரசியல்வாதிகள் தடுப்பது ஏன், மாணவர்களின் படிப்பில் அரசியல் என்பது தமிழகத்தில் தான் நடக்கிறது. யாருடைய எதிர்காலத்தை வைத்து அரசியல் நடக்கிறதோ... அவர்களிடமே (மாணவர்கள்) மூன்றாவது மொழியை கற்பது குறித்து கேட்டோம்...
கரூர் மாணவர்கள் கூறியதாவது:
ஹிந்தி கற்பது அவசியம்
ராம்பாண்டியன்
தமிழ், ஆங்கிலம் போல, மூன்றாவது ஒரு மொழியை கற்றுக்கொள்வதில் தவறு இல்லை. நாடு முழுவதும் அதிக மாநிலங்களில் பேசக்கூடிய ஹிந்தியை படிக்கிறேன். அதன் மூலம் குடியரசு தின விழா, சுதந்திர தின விழாவின் போது, ஜனாதிபதி, பிரதமரின் ஹிந்தி உரைகளை எளிதாக கேட்க முடிகிறது. தமிழகத்தை தவிர்த்து, வெளி மாநிலங்களுக்கு பெற்றோருடன், சுற்றுலா செல்லும் போது, அவர்களுக்கு நான் தான் ஹிந்தி மொழிப்பெயர்ப்பாளன். அனைவரும் மூன்றாவதாக ஒரு மொழியை கற்க வேண்டும். அது ஹிந்தி மொழியாக இருந்தால், நாடு முழுவதும் எளிதாக சென்று திரும்பி வர முடியும். எனவே, தமிழகத்தில் மும்மொழி பாடத் திட்டம் தேவையான ஒன்று.
3வது மொழி வேண்டும்
கார்ணிகா
தமிழ் தொன்மையான மொழி. நான் பள்ளியில் ஹிந்தி படித்தாலும், வீடு மற்றும் பொது இடங்களில் தமிழில் பேசுகிறேன். ஒரு மொழியை கூடுதலாக கற்பது, நமக்கு பலமாக இருக்கும்.
புதிய கல்வி கொள்கையில், ஹிந்தி கட்டாயம் இல்லை. பிரெஞ்ச் உள்ளிட்ட, பிற இந்திய மொழிகளையும் கற்கலாம் என்றுதான் கூறப்பட்டுள்ளது. தமிழகத்தில், அரசு பள்ளிகளிலும் மூன்றாவது ஒரு மொழியை கட்டாயம் கற்று தர வேண்டும்.
இது மாணவ, மாணவியரின் எதிர்காலத்துக்கு பயனுள்ளதாக இருக்கும்.
பள்ளிகளில் கற்பிக்க வேண்டும்
பிரவீன்
நான் தமிழ் வழியில் பிளஸ் 1 படித்து வருகிறேன். நான் சார்ந்த ஊர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் மூன்றாம் மொழி கற்பிக்கும் மையங்கள் இல்லை. வெளிநாடு சென்று வேலை பார்ப்பதற்கு ஆர்வமாக உள்ளேன். எனவே, எங்களை போன்ற எதிர்கால சந்ததியை கருத்தில் கொண்டு, மூன்றாம் மொழியை பள்ளிகளில் கற்பிக்க வேண்டும்.
கற்பதில் சிரமமில்லை
அமுதன்
மெட்ரிகுலேஷன் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறேன். மூன்றாவது மொழியை மாணவ பருவத்திலேயே கற்கும் போது, எதிர்காலத்தில் பயனுள்ளதாக அமையும். தமிழகத்தை தாண்டினால், ஆங்கிலத்தில் மட்டுமே பேசி மற்ற மாநில மக்களுக்கு புரிய வைக்க முடியாது. ஆதலால் ஆங்கிலத்துடன் சேர்த்து ஹிந்தி, மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளை கற்பதில் மாணவர்களாகிய எங்களுக்கு எவ்வித சிரமமும் ஏற்படப்போவதில்லை. வேலைவாய்ப்பு பெருகவாய்ப்பு கிடைக்கும்.
கூடுதல் மொழி
அறிவு வலிமை
ஆதித்யா ரவிச்சந்திரன்
தமிழகத்தில் வட மாநிலத்தை சேர்ந்தவர்கள், குடியேறி வருகின்றனர். ஹிந்தி தெரியாததால், அவர்களிடம் பேச முடிவதில்லை. வரும் காலத்தில் இவர்களின் வருகை இன்னும் அதிகமாகும்.
ஹிந்தியை கற்றுக்கொண்டால், மத்திய அரசின் ரயில்வே துறை, வங்கி துறை, எல்.ஐ.சி., உள்ளிட்ட, பல்வேறு துறைகளில் போட்டி தேர்வுகளில் எளிதாக வெற்றி பெற்று வேலையை பெற முடியும். தமிழகத்தில் அரசு பள்ளிகளில், ஹிந்தி கற்பிக்கப்பட்டால், கூடுதலான எண்ணிக்கையில் ராணுவத்தில் சேர முடியும். கூடுதல் மொழியை கற்பது என்பது சுமை அல்ல. அது வலிமையாக மாறும்.
'ஹிந்தி' எதிர்ப்பு கவலைக்குரியது
யோகா கார்த்திக்
தமிழகத்தில் உள்ள தனியார் பள்ளிகளில், முதன்மை பாடமாக ஹிந்தி கற்பிக்கப்படுகிறது. அரசு பள்ளிகளில் ஹிந்தி அல்லது வேறு ஏதேனும் ஒரு மொழியை கற்று கொடுத்தால், பயனுள்ளதாக இருக்கும். மும்மொழி பாடத் திட்டத்தை அறிமுகப்படுத்தினால் மட்டுமே, தமிழகத்தில் கல்வியில் சமூக நீதியை ஏற்படுத்த முடியும். இல்லையென்றால், சமூக நீதி என்பது பேச்சளவில்தான் இருக்கும். அனைவரும் சமம், சமத்துவம், சமூக நீதி பேசும் தமிழகத்தில், ஒரு குறிப்பிட்ட மொழிக்கு பல ஆண்டுகளாக எதிர்ப்பு
உள்ளது கவலைக்குரியது.
பள்ளிகளில் மூன்றாவது மொழி
ராம் நிவாஸ்
நான் பிளஸ் 1 படித்து வருகிறேன். தமிழகத்தில் மாநகர பகுதியில் படிக்கும் மாணவ, மாணவியர் தமிழ், ஆங்கிலம், ஹிந்தி மற்றும் மலையாளம். தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகள் பயின்று வருகின்றனர். இவர்கள் படிக்கும் படிப்புக்கு வெளிநாடுகளில் வேலை வாய்ப்பு கிடைக்க ஏதுவாக உள்ளது. எனவே, அனைத்து பள்ளிகளிலும் மூன்றாவது மொழி கற்க அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்.