/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
தமிழ் நகரில் மோசமான சாலை: வாகன ஓட்டிகள் தவிப்பு
/
தமிழ் நகரில் மோசமான சாலை: வாகன ஓட்டிகள் தவிப்பு
ADDED : மார் 06, 2025 01:48 AM
தமிழ் நகரில் மோசமான சாலை: வாகன ஓட்டிகள் தவிப்பு
கரூர்:-கரூர் மாநகராட்சி, 42வது வார்டு தமிழ் நகரில் உள்ள சாலை குண்டும், குழியுமாக காணப்படுவதால், வாகன ஓட்டிகள் தவித்து வருகின்றனர்.
கரூர் மாநகராட்சிக்குட்பட்ட, 42-வது வார்டில் உள்ள தமிழ் நகரில், 500-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. முத்துலாடம்பட்டியின் விரிவாக்கமாக விளங்கும் இப்பகுதியில், தனியார் மேல்நிலைப்பள்ளி மற்றும் வள்ளலார் கோவில் ஆகியவை அமைந்துள்ளன. காந்திகிராமத்தில் இருந்து, தமிழ் நகருக்கு செல்லும் சாலை உள்பட பெரும்பாலான சாலைகள், பல ஆண்டுகளுக்கு மேலாக குண்டும், குழியுமாகவே காட்சி அளிக்கிறது. புதிய குடியிருப்புகள் உருவாகும்போது, போடப்பட்ட மண் சாலையாகத்தான் இங்கு உள்ளன.
கரூர் மாநகராட்சியின் எல்லைக்குள் இருக்கும், இந்த சாலையை சீரமைக்க கோரி அப்பகுதியினர் பல ஆண்டுகளாக மாநகராட்சி, கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனு கொடுத்தும், இதுவரை நடவடிக்கை இல்லை. கடந்த டிசம்பரில் பெய்த மழையால், சாலையில் ஆங்காங்கே அரிப்பு ஏற்பட்டு மேலும் குண்டும், குழியுமாக மாறியது.
பொதுமக்கள் கூறுகையில், 'எங்கள் பகுதியில் வீடுகள் உருவாகும் முன் எப்படி சாலை இருந்ததோ, அதே நிலைதான் தற்போது வரை உள்ளது. பள்ளிக்கு இரண்டு சக்கர வாகனங்களில் வருவோர், மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே, போர்க்கால அடிப்படையில் தார்ச்சாலையாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.