/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
சாந்தபாடியில் ஆடு வளர்ப்பு குறித்த பண்ணை பள்ளி பயிற்சி
/
சாந்தபாடியில் ஆடு வளர்ப்பு குறித்த பண்ணை பள்ளி பயிற்சி
சாந்தபாடியில் ஆடு வளர்ப்பு குறித்த பண்ணை பள்ளி பயிற்சி
சாந்தபாடியில் ஆடு வளர்ப்பு குறித்த பண்ணை பள்ளி பயிற்சி
ADDED : மார் 09, 2025 02:02 AM
சாந்தபாடியில் ஆடு வளர்ப்பு குறித்த பண்ணை பள்ளி பயிற்சி
அரவக்குறிச்சி:அரவக்குறிச்சி அருகே சாந்தப்பாடி கிராமத்தில், அரவக்குறிச்சி வட்டார வேளாண் துறை சார்பில், ஆத்மா திட்டத்தின் கீழ் ஆடு வளர்ப்பு குறித்த பண்ணை பள்ளி பயிற்சி நடந்தது.
அரவக்குறிச்சி வேளாண்மை உதவி இயக்குனர் ராஜா, வேளாண்மை துறையில் உள்ள திட்டங்கள், புதிதாக கடைப்பிடித்து வரும் தொழில்நுட்பங்கள் குறித்து விவசாயிகளுக்கு விளக்கம் அளித்தார். விவசாயிகளுக்கு அக்ரி ஸ்டாக் திட்டத்தில் பதிவு செய்யும் விபரங்கள், அதன் முக்கியத்துவங்கள் குறித்தும் விளக்கம் அளித்தார்.
தொடர்ந்து சாந்தப்பாடி கால்நடை மருத்துவர் பிரபாகரன், விவசாயிகளுக்கு செம்மறி ஆடு மற்றும் வெள்ளாடு வளர்ப்பு முறைகள், அவைகளுக்கு வழங்கும் தடுப்பூசிகள், கொட்டகை பராமரிப்பு, தீவன முறைகள் குறித்து விளக்கமளித்தார்.
கறவை மாடுகளுக்கு ஏற்படும் நோய், தடுப்பூசி, குடற்புழு நீக்கம் மற்றும் தீவன முறைகள் குறித்து விளக்கப்பட்டது. பயிற்சி இறுதியில் விவசாயிகளுக்கு நுண்ணுாட்ட கலவை வழங்கப்பட்டது. மேலும் லாபகரமான செம்மறி ஆடு மற்றும் வெள்ளாடு வளர்ப்பு முறை குறித்த தொழில்நுட்ப கையேடும் வழங்கப்பட்டது.
சாந்தப்பாடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த, 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்றனர்.