/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
வீடு கட்டி தந்ததில் பண மோசடிசொசைட்டி மேலாளர் மீது வழக்கு
/
வீடு கட்டி தந்ததில் பண மோசடிசொசைட்டி மேலாளர் மீது வழக்கு
வீடு கட்டி தந்ததில் பண மோசடிசொசைட்டி மேலாளர் மீது வழக்கு
வீடு கட்டி தந்ததில் பண மோசடிசொசைட்டி மேலாளர் மீது வழக்கு
ADDED : மார் 09, 2025 02:03 AM
வீடு கட்டி தந்ததில் பண மோசடிசொசைட்டி மேலாளர் மீது வழக்கு
கரூர்:கரூர் அருகே, வீடு கட்டியதற்கு பணம் செலுத்தாமல் மோசடி செய்ததாக, தான்தோன்றிமலை கூட்டுறவு சொசைட்டி மேலாளர் மீது, போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டம், பழனி திருநகரை சேர்ந்தவர் காளிமுத்து, 51, சிவில் இன்ஜினியர். இவர் கடந்த, 2022ல், கரூர் புலியூர் கவுண்டம்பாளையம் கிழக்கு பகுதியை சேர்ந்த தர்மலிங்கம், 52, என்பவருக்கு, ஒப்பந்த அடிப்படையில் வீடு கட்டி கொடுத்துள்ளார்.
ஆனால், ஒப்பந்தத்தின்படி தர்மலிங்கம், காளிமுத்துவுக்கு, 18 லட்சத்து, 43 ஆயிரத்து, 750 ரூபாயை தரவில்லை. இதுகுறித்து, காளிமுத்து கரூர் ஜே.எம்.,-1 நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிமன்றம், காளிமுத்துவின் புகாரை விசாரித்து, நடவடிக்கை எடுக்க பசுபதிபாளையம் போலீசாருக்கு உத்தரவிட்டது.
இதையடுத்து, தான்தோன்றிமலை கூட்டுறவு சொசைட்டி மேலாளராக உள்ள தர்மலிங்கம் மீது, பசுபதிபாளையம் போலீஸ் இன்ஸ்பெக் டர் முத்துக்குமார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.