/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
அரவக்குறிச்சியில் இருந்து ஒத்தமாந்துறைவழியாக அரசு பஸ் இயக்க வலியுறுத்தல்

ADDED : மார் 14, 2025 01:32 AM
அரவக்குறிச்சியில் இருந்து ஒத்தமாந்துறைவழியாக அரசு பஸ் இயக்க வலியுறுத்தல்
அரவக்குறிச்சி:அரவக்குறிச்சியில் இருந்து, ஒத்தமாந்துறை வழியாக தென்னிலை வரை அரசு பஸ்கள் இயக்க வேண்டும் என, வேண்டு கோள் விடுக்கப்பட்டுள்ளது.
அரவக்குறிச்சி, பள்ளப்பட்டி ஆகிய ஊர்களில் இருந்து கரூர், மூலனுார், கன்னிவாடி, தாராபுரம், ஈசநத்தம், கோவிலுார் என பல்வேறு ஊர்களுக்கு டவுன் பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. ஆனால் அரவக்குறிச்சியில் இருந்து, ஒத்தமாந்துறை வழியாக தென்னிலைக்கு டவுன் பஸ் வசதி இல்லை.
அரவக்குறிச்சி, ஊத்துார், பாலமேடு, தண்ணீர் பந்தல், அரிக்காரன்வலசு, கல்லமடைபுதுார் பிரிவு, பள்ளப்பட்டி பிரிவு, ஒத்த மாந்துறை, சின்னதாராபுரம்,
தென்னிலை வழித்தடத்தில் இதுவரை டவுன் பஸ் இயக்கப்படவில்லை.இதேபோல தென்னிலையிலிருந்து அரவக்குறிச்சி, பள்ளப்பட்டிக்கு மறு வழித்தடத்தில் டவுன் பஸ் இயக்கப்படவில்லை. இந்த வழித்தடத்தில், மூன்று கி.மீ.,க்கு ஒரு கிராமம் வீதம், 30 கி.மீ., தொலைவுள்ள இந்த வழித்தடங்களில், பெயின்டர்கள், கொத்தனார் உள்ளிட்ட கூலி வேலை பார்ப்பவர்கள் மாணவ, மாணவியர் மத்திய, மாநில அரசு பணிகளுக்கு செல்பவர்கள் என ஏராளமானோர் டவுன் பஸ் வசதி இல்லாததால் பாதிக்கப்படுகின்றனர்.
மேலும் தென்னிலை, சின்னதாராபுரம் மக்கள் பல்வேறு வேலை காரணமாக, அரவக்குறிச்சி தாலுகா அலுவலகம் வருவதற்கு சிரமத்திற்கு உள்ளாகின்றனர். இந்த வழித்தடத்தில் டவுன் பஸ் இயக்கினால், பள்ளப்பட்டி பிரிவிலிருந்து அரவக்குறிச்சிக்கு சுற்றி வராமல் நேர் வழியாக வந்துவிட முடியும்.
எனவே அரவக்குறிச்சி, ஊத்துார், பாலமேடு, தண்ணீர் பந்தல், அரிக்காரன்வலசு, கள்ளமடைபுதுார் பிரிவு, பள்ளப்பட்டி பிரிவு, ஒத்தமாந்துறை வழியாக இரு மார்க்கத்திலும் டவுன் பஸ் வசதி செய்தால், ஏராளமானோர் பயனடைவர்.