sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், பிப்ரவரி 11, 2026 ,தை 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

மணல் லாரிகளின் அசுர வேகம் உயிர் பயத்தில் நடமாடும் மக்கள்

/

மணல் லாரிகளின் அசுர வேகம் உயிர் பயத்தில் நடமாடும் மக்கள்

மணல் லாரிகளின் அசுர வேகம் உயிர் பயத்தில் நடமாடும் மக்கள்

மணல் லாரிகளின் அசுர வேகம் உயிர் பயத்தில் நடமாடும் மக்கள்


ADDED : ஜூலை 14, 2011 12:33 AM

Google News

ADDED : ஜூலை 14, 2011 12:33 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

லாலாப்பேட்டை: கிருஷ்ணராயபுரம் பகுதியில் உள்ள சாலைகளில் மணல் மற்றும் ஜல்லி லாரிகள் அசுர வேகத்தில் செல்லுவதால் பஸ் மற்றும் டூவீலரில் பயணம் செய்வோர் கடும் அச்சத்தில் செல்ல வேண்டியுள்ளது.

கரூர் - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சாலை விரிவாக்கம் செய்யும் பணி நடந்து வருகிறது. மேலும், கிருஷ்ணராயபுரம் பகுதியில் காவிரி படுகையில் இருந்து தினசரி 1,000க்கு மேற்பட்ட லாரிகள் மணல் ஏற்றிச் செல்ல லாலாப்பேட்டை, கருப்பத்தூர், வதியம் ஆகிய பகுதிகளுக்கு வருகின்றன. அதேபோல், கரூர் அடுத்துள்ள க.பரமத்தி, பவித்திரம் ஆகிய பகுதிகளிலிருந்து ஜல்லி கற்களை ஏற்ற தினசரி 500க்கு மேற்பட்ட லாரிகள் வருகிறது. மணல் மற்றும் ஜல்லிகளை ஏற்றிக்கொண்டு கரூர் நகர் பகுதிகளில் வரும் லாரிகள், ஆங்காங்கே போலீஸார் இருப்பதால் குறைந்த வேகத்தில் செல்கிறது. ஆனால், கரூரை கடந்து திருச்சி செல்லும் லாரிகள் கரூர் - திருச்சி சாலையில் உள்ள புலியூர், வீரராக்கியம், மாயனூர், கிருஷ்ணராயபுரம் ஆகிய பகுதிகளில் செல்லும் வழியில் போலீஸாரின் குறுக்கீடுகள் இல்லாததால், அசுர வேகத்தில் செல்கிறது. இதனால் அரசு மற்றும் தனியார் பஸ்களில் பயணம் செய்யும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் பெரிதும் பயத்துடன் செல்ல வேண்டியுள்ளது. மேலும், மணல் மற்றும் ஜல்லி லாரி டிரைவர்கள் சிலர் குடிபோதையில் லாரிகளை ஓட்டுவதாக தெரிகிறது. பின்னால் வரும் வண்டிகளுக்கும், எதிரில் வரும் வாகனங்களுக்கும் வழிவிடாமல் நடுரோட்டிலேயே செல்கின்றனர். இதனால் ஒருசில நேரங்களில் பஸ் டிரைவருக்கும், மணல் லாரி டிரைவர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டு வருகிறது. எனவே, மணல் மற்றும் ஜல்லி லாரிகள் குறைந்த வேகத்தில் செல்ல கரூர் ஆர்.டி.ஓ., ரோந்து போலீஸார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.








      Dinamalar
      Follow us