sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், பிப்ரவரி 02, 2026 ,தை 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

கூடலூர்-மேட்டுமருதூர் பாசன வாய்க்கால் தூர்வார வேண்டும்: விவசாயிகள் கோரிக்கை

/

கூடலூர்-மேட்டுமருதூர் பாசன வாய்க்கால் தூர்வார வேண்டும்: விவசாயிகள் கோரிக்கை

கூடலூர்-மேட்டுமருதூர் பாசன வாய்க்கால் தூர்வார வேண்டும்: விவசாயிகள் கோரிக்கை

கூடலூர்-மேட்டுமருதூர் பாசன வாய்க்கால் தூர்வார வேண்டும்: விவசாயிகள் கோரிக்கை


ADDED : ஆக 12, 2011 01:21 AM

Google News

ADDED : ஆக 12, 2011 01:21 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குளித்தலை: 'குளித்தலை அருகே கூடலூர் - மேட்டு மருதூர் பாசன வாய்க்கால் தூர்வார வேண்டும்' என விவசாயிகள் மாவட்ட நிர்வாகத்துக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

மருதூர் டவுன் பஞ்சாயத்துக்கு உட்பட்ட கூடலூர் - மேட்டு மருதூர் கிராமத்தில் 500 ஏக்கருக்கு மேல் பயன்பெரும் கட்டளை மேட்டு வாய்க்கால், கருங்களர் பள்ளி பிரிவு பாசன வாய்க்கால் சிதிலமடைந்துள்ளது. இதனால் ஆடிப்பட்டத்தில் நெல் விதை விதைக்க கூட முடியாத அளவு தண்ணீர் வராமல் தேக்கம் ஏற்பட்டு வருகிறது. கடந்த மூன்று ஆண்டுகளாக கூடலூர் - மேட்டு மருதூர் பகுதி விவசாயிகள் வாய்க்காலில் செடிகள் அகற்றப்பட்டு மிகவும் சிரமத்துக்கு மத்தியில் கடந்த நெல் சாகுபடி செய்து அறுவடை செய்தனர். பாசன வாய்க்கால்கள் தூர்ந்து போனதால், போதிய தண்ணீர் இல்லாமல் சாகுபடி செய்த நெல் காய்ந்து போனதால் 20 க்கும் மேற்பட்ட விவசாயிகள் பெரும் நஷ்டத்துக்கு ஆளாயினர். சமீபத்தில ஆடிப்பட்டத்தில் நெல் சாகுபடிக்காக, கட்டளை மேட்டு வாய்க்காலில் தண்ணீர் திறந்து விடப்பட்டும் விவசாய நிலத்துக்கு தண்ணீர் வரவில்லை. மேலும், பாசன கண்ணாற்றில் செடி, கொடிகள் வளர்ந்து அடைப்பு ஏற்பட்டதால் விவசாயம் செய்துள்ள கோரை பயிர் மற்றும் வாழை பயிர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. நெல் விவசாயிகள் விதை விதைக்கவும், காய்ந்துப்போன கோரைப்பயிர், வாழை பயிர்களை காப்பாற்றவும், பொதுப்பணித்துறையினர் கூடலூர், மேட்டு மருதூர் பாசன வாய்க்காலை உடனடியாக தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.








      Dinamalar
      Follow us