/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
போக்குவரத்துக்கு இடையூறான பிளாட்பாரத்தை அகற்றலாமே
/
போக்குவரத்துக்கு இடையூறான பிளாட்பாரத்தை அகற்றலாமே
ADDED : ஆக 08, 2024 01:49 AM
குளித்தலை, பஸ் ஸ்டாண்டில் இடையூறாக உள்ள, பிளாட்பாரத்தை அகற்ற வேண்டும்.
குளித்தலை பஸ் ஸ்டாண்ட், ஹிந்து சமய அறநிலைய துறை கட்டுப்பாட்டில் உள்ள பேராளகுந்தாலம்மன் கோவிலுக்கு சொந்தமான நிலத்தில், நகராட்சி நிர்வாகம் வாடகை செலுத்தி பயன்படுத்தி வருகிறது. பஸ் ஸ்டாண்ட் மைய பகுதியில் உயர் மின் கோபுரம் அருகில், 10க்கு 10 அடி அகலத்தில், 5 அடி உயரத்தில் பிளாட்பாரம் கட்டப்பட்டு, ஏழு மாதங்களுக்கு மேலாக இருந்து வருகிறது. இந்த பிளாட்பாரத்தால் பஸ்கள் திரும்பி செல்வதில் இடையூறு ஏற்பட்டு வருகிறது. பொது மக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறாக உள்ள, பிளாட்பாரத்தினை அகற்றிட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.