/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
அங்கன்வாடி ஊழியர்கள், உதவியாளர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்
/
அங்கன்வாடி ஊழியர்கள், உதவியாளர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்
அங்கன்வாடி ஊழியர்கள், உதவியாளர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்
அங்கன்வாடி ஊழியர்கள், உதவியாளர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்
ADDED : செப் 13, 2024 06:48 AM
குளித்தலை: குளித்தலை யூனியன் அலுவலக வளாகத்தில், தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர்களை அரசு ஊழியர்களாக்குவோம் என்ற தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றிட வலியுறுத்தி நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
சங்க தலைவர் வாசுகி தலைமை வகித்தார். செயலாளர் நல்லம்மாள், பொருளாளர் லட்சுமி, பொறுப்பாளர்கள் சாந்தி, ராதிகா ஆகியோர் முன்னிலை வகித்தனர். சி,ஐ.டி.யு., சங்க முருகேசன், ரத்தினசபாபதி ஆகியோர் பேசினர். இதில், அங்கன் வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்களை அரசு ஊழியர்களாக அறிவித்து கிரேடு 3, கிரேடு 4, அரசு ஊழியர்களாக முறைப்படுத்தி ஊதியம் வழங்க வேண்டும், அங்கன் வாடி ஊழியர்களுக்கு பணிக்கொடை தொகை, 10 லட்சம், உதவியாளர்களுக்கு, 5 லட்சம் ரூபாய் வழங்க வேண்டும்.
10ஆண்டு பணி முடித்த ஊழியர்கள் அனைவருக்கும் மேற்பார்வையாளர்களாக பதவி உயர்வு வழங்கவேண்டும். மே மாதம் முழுவதும் விடுமுறை அளிக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. நிறைவாக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பொதுச்செயலாளர் சீதாராம்யெச்சூரி மறைவுக்கு மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. இதேபோல், தோகைமலை யூனியன் அலுவலக வளாகத்தில் மாவட்ட தலைவி பத்மாவதி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட துணைத்தலைவி எப்சிராணி, ஒன்றிய தலைவர் ராணி, துணைத்தலைவர் சங்கரபாணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.