/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து பா.ஜ., ஆர்ப்பாட்டம் அறிவிப்பு
/
நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து பா.ஜ., ஆர்ப்பாட்டம் அறிவிப்பு
நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து பா.ஜ., ஆர்ப்பாட்டம் அறிவிப்பு
நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து பா.ஜ., ஆர்ப்பாட்டம் அறிவிப்பு
ADDED : அக் 04, 2024 01:16 AM
நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து
பா.ஜ., ஆர்ப்பாட்டம் அறிவிப்பு
குளித்தலை, அக். 4-
குளித்தலை நகர, பா.ஜ., தலைவர் கணேசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
குளித்தலை நகராட்சி பொது நிதியில் இருந்து, பெரியபாலம் பரிசல் துறை காவிரி ஆற்றுப்படுகையில், மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, ஒரு கோடி ரூபாய் மதிப்பில் எரிவாயு தகன மேடை அமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. பணிகள் ஆமைவேகத்தில் நடந்து வருகிறது. இறந்த சடங்களை எரிவாயு மூலம் தகனம் செய்ய பணியை விரைந்து முடிக்க வேண்டும். வரும், 25க்குள் பணியை முடித்து, பொது மக்கள் பயன்பாட்டுக்கு விட நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் நகராட்சியை கண்டித்து, கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இதுகுறித்து நகராட்சி கமிஷினர் நந்தகுமார் கூறுகையில்,'' பணிகள் நிறைவு வெறும் வகையில் உள்ளது. விரைவில் பொது மக்கள் பயன்பாட்டுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.