/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கரூர் பகுதிகளில் பனிப்பொழிவுகடும் குளிரால் மக்கள் அவதி
/
கரூர் பகுதிகளில் பனிப்பொழிவுகடும் குளிரால் மக்கள் அவதி
கரூர் பகுதிகளில் பனிப்பொழிவுகடும் குளிரால் மக்கள் அவதி
கரூர் பகுதிகளில் பனிப்பொழிவுகடும் குளிரால் மக்கள் அவதி
ADDED : ஜன 19, 2025 01:49 AM
கரூர் பகுதிகளில் பனிப்பொழிவுகடும் குளிரால் மக்கள் அவதி
கரூர்,:கரூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில், நேற்று கடும் பனிப்பொழிவு காணப்பட்டது. இதனால், பொதுமக்கள் குளிரில் அவதிப்பட்டனர்.
தை மாதத்தில், 'தரையெல்லாம் குளிரும்' என்ற பழமொழி உண்டு. தை மாதம் துவங்கி, ஐந்து நாட்கள் ஆன நிலையில், தஞ்சாவூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில், நேற்று முதல் நாளை வரை, மூன்று நாட்களுக்கு மழை பெய்யும் என, சென்னை வானிலை மையம் அறிவித்திருந்தது. இந்நிலையில், நேற்று காலை முதல், கரூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில், வானம் மேகமூட்டமாக காணப்பட்டது. மேலும் நேற்று மாலை வரை, கடும் பனிப்பொழிவு காணப்பட்டது.
கரூர் நகரை சுற்றியுள்ள சேலம், திருச்சி, மதுரை மற்றும் கோவை நெடுஞ்சாலைகளில் பனிப்பொழிவு காரணமாக, குளிர்ந்த காற்று வீசியது. அதேபோல், கரூர் அமராவதி ஆற்றிலும் பனிப்பொழிவை பார்க்க முடிந்தது. குளிரால் குழந்தைகள், முதியவர்கள் அவதிப்பட்டனர். கரூர் மாவட்டத்தில் சில நாட்களாக இரவு, 9:00 மணிக்கு தொடங்கும் பனியின் தாக்கம் காலை, 10:00 மணி வரை உணர முடிகிறது. வானிலை மாற்றத்தால் மழை மேகங்கள் திரண்டு, நேற்று மாலை சிறிது நேரம் சாரல் மழை பெய்தது.
காலநிலை மாற்றத்தால், ஏராளமானோார் காய்ச்சலில் பாதிக்கப்பட்டு மருத்துவமனை செல்கின்றனர். அதிகாலை நேரத்தில், பனி மூட்டம் நிலவுவதால் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி
செல்கின்றனர்.