/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
இறைச்சி கடை உரிமையாளருக்கு பள்ளப்பட்டி நகராட்சி எச்சரிக்கை
/
இறைச்சி கடை உரிமையாளருக்கு பள்ளப்பட்டி நகராட்சி எச்சரிக்கை
இறைச்சி கடை உரிமையாளருக்கு பள்ளப்பட்டி நகராட்சி எச்சரிக்கை
இறைச்சி கடை உரிமையாளருக்கு பள்ளப்பட்டி நகராட்சி எச்சரிக்கை
ADDED : ஜன 31, 2025 01:23 AM
அரவக்குறிச்சி,:அரவக்குறிச்சி அருகே, பள்ளப்பட்டி நகராட்சியில், 100க்கும் மேற்பட்ட இறைச்சி கடைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த இறைச்சி கடைகளில் சேரும் கழிவுகளை, நங்காஞ்சி ஆற்றின் அருகிலும், அண்ணா நகர் அருகே உள்ள பாலத்தின் அடியிலும், இறைச்சி கடை உரிமையாளர்கள் கொட்டி குவித்து வந்தனர்.
இதனால், பள்ளப்பட்டி நகருக்குள் நுழையும்போதே கடும் துர்நாற்றம் வீசியது. நோய்தொற்று ஏற்படும் அபாயம் ஏற்பட்டது. மேலும், இறைச்சிக்கழிவுகளால், நங்காஞ்சி ஆறு மாசடைந்து வருவதாக, நீண்ட காலமாக பொதுமக்கள் புகார் தெரிவித்து வந்தனர்.
இந்நிலையில், நகராட்சி நிர்வாகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:இறைச்சி கழிவுகளை தெருவோரம், கழிவுநீர் கால்வாய், நங்காஞ்சி ஆறு அல்லது பாலத்தின் அருகில் கொட்டப்படுவது சட்டப்படி குற்றம். மீறி கொட்டினால், கொட்டப்படும் கடை உரிமையாளர் மீது கடும் நடவடிக்கை எடுத்து அபராதம் விதிக்கப்படும்.
மேலும், நகராட்சி நிர்வாகம் சார்பில், இறைச்சி கடை முன் வந்து நிற்கும் நகராட்சி வாகனங்களிலேயே இறைச்சி கழிவுகளை கொட்ட வேண்டும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.