/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
போதை பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு மனித சங்கிலி
/
போதை பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு மனித சங்கிலி
ADDED : பிப் 01, 2025 12:51 AM
போதை பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு மனித சங்கிலி
அரவக்குறிச்சி: அரவக்குறிச்சி அரசு மருத்துவமனை முன், அரவக்குறிச்சி கலை மற்றும் அறிவியல் கல்லுாரியின் நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள் சார்பில், போதை பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு மனித சங்கிலி நிகழ்ச்சி நேற்று நடந்தது.
இதில் நாட்டு நலப்பணித்திட்ட மாணவ, மாணவியர் சங்கிலிபோல் ஒருவருக்கொருவர் கைகளை கோர்த்து அணிவகுத்து நின்றனர். இவர்களுடன் கல்லுாரி முதல்வர் காளீஸ்வரி, அரவக்குறிச்சி போதை தடுப்பு எஸ்.எஸ்.ஐ., சிவகாமி மற்றும் பேராசிரியர்கள், போலீசார் கைகோர்த்து நின்றனர்.
மேலும், கள்ளச்சாராயம், போதை பொருட்கள் பயன்படுத்துவதால் கண்பார்வை இழத்தல், உடல்நல பாதிப்புகள் ஏற்படும். போதை பொருட்கள் கடத்துவதோ, வைத்திருப்பதோ, விற்பதோ, பயன்படுத்துவதோ சட்டப்படி குற்றமாகும்.
இது சம்பந்தமான புகார்களை, 10581 என்ற, 24 மணி நேர கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் தெரிவிக்கலாம் என, பொதுமக்கள், வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.