/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
டிரைவரிடம் பணம் பறித்த இரு திருநங்கைகள் கைது
/
டிரைவரிடம் பணம் பறித்த இரு திருநங்கைகள் கைது
ADDED : பிப் 09, 2025 01:02 AM
டிரைவரிடம் பணம் பறித்த இரு திருநங்கைகள் கைது
கரூர்:கரூர் அருகே, டிரைவரிடம் பணம் பறித்த, இரண்டு திருநங்கைகளை போலீசார் கைது செய்தனர்.தேனி மாவட்டம், போடி நாயக்கனுார் பகுதியை சேர்ந்தவர் சிவக்குமார், 47; இவர் கடந்த, 7ல் இரவு பொலிரோ காரில், கரூர் அருகே, மதுரை தேசிய நெடுஞ்சாலை திருக்காம்புலியூர் பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது, கரூர் மாவடியான் கோவில் தெருவை சேர்ந்த திருநங்கைகள் அனிதா, 26; மீரா, 20; ஆகியோர், பொலிரோ காரை வழிமறித்து நிறுத்தியுள்ளனர். பிறகு, டிரைவர் சிவக்குமார் வைத்திருந்த, ஒரு லட்சத்து, 27 ஆயிரத்து, 100 ரூபாயை பறித்து கொண்டு தப்பினர். இதுகுறித்து, டிரைவர் சிவக்குமார் அளித்த புகார்படி, கரூர் டவுன் போலீசார், திருநங்கைகள் அனிதா, மீரா ஆகியோரை கைது செய்தனர்.