/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கரூரில் டர் மழைசர்க்கரை வள்ளி கிழங்கு அமோக விளைச்சல்
/
கரூரில் டர் மழைசர்க்கரை வள்ளி கிழங்கு அமோக விளைச்சல்
கரூரில் டர் மழைசர்க்கரை வள்ளி கிழங்கு அமோக விளைச்சல்
கரூரில் டர் மழைசர்க்கரை வள்ளி கிழங்கு அமோக விளைச்சல்
ADDED : பிப் 13, 2025 01:14 AM
கரூரில் டர் மழைசர்க்கரை வள்ளி கிழங்கு அமோக விளைச்சல்
கரூர்:தொடர் மழை காரணமாக, சர்க்கரை வள்ளி கிழங்கு விளைச்சல் அதிகரித்துள்ளது. கரூரில், கூவி கூவி விற்பனை செய்யப்படுகிறது.
தமிழகம் முழுவதும் கடந்த, அக்டோபர் முதல், பரவலாக மழை பெய்தது. இதனால், மானாவாரி நிலங்களில் பயறு வகைகள் மற்றும் சர்க்கரை வள்ளி கிழங்கை விவசாயிகள் சாகுபடி செய்தனர். குறிப்பாக, கரூர் மாவட்டத்தில் பெய்த மழை காரணமாக கடவூர், தோகமலை, குளித்தலை பகுதிகளில் சர்க்கரை வள்ளி கிழங்கு விளைச்சல் அதிகரித்துள்ளது.
மேலும், திண்டுக்கல் மாவட்டத்தில் இருந்தும் நாள்தோறும், மூட்டை மூட்டையாக சர்க்கரை வள்ளி கிழங்கு கரூர் உழவர் சந்தை, காமராஜ் தினசரி மார்க்கெட்டுக்கு வரத்தாகிறது. இதனால், கரூர் நகர பகுதிகளில் வேன் மற்றும் தள்ளுவண்டிகளில், ஒரு கிலோ சர்க்கரை வள்ளி கிழங்கு, 30 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இதுகுறித்து, வியாபாரிகள் கூறியதாவது: ஆண்டுதோறும், மாசி மாதத்தில்தான் சர்க்கரை வள்ளி கிழங்கு விற்பனைக்கு வரும். விளைச்சல் அதிகரித்துள்ளதால், கடந்த வாரமே சர்க்கரை வள்ளி கிழங்கு விற்பனைக்கு வந்து விட்டது. கடந்தாண்டு, ஒரு கிலோ சர்க்கரை வள்ளி கிழங்கு, 50 ரூபாய் வரை விற்றது. தற்போது, சைஸ் பெரிதாக இருந்தாலும், 30 ரூபாய்க்கு தான் கூவி கூவி விற்பனை செய்ய வேண்டிய நிலை உள்ளது. மஹா சிவராத்திரியின் போது, கிழங்கு வகைகளை பொதுமக்கள் விரும்பி வாங்கும் போது, விலை சற்று அதிகரிக்க வாய்ப்புள்ளது. இவ்வாறு கூறினர்.

